Monday, March 26, 2007

ஜகத் ஜனனி சுகபாணி கல்யாணி


ஜகத் ஜனனி சுகபாணி கல்யாணி
(உலக அன்னையே; கிளியை ஏந்தியவளே; மங்கலவடிவினளே)

சுகஸ்வரூபினி மதுரவாணி(கிளியைப் போன்று அழகானவளே; இனிய குரலை உடையவளே)
சொக்கநாதர் மனம் மகிழும் மீனாட்சி (ஜகத் ஜனனி)
பாண்டிய குமாரி பவானி அம்பா சிவ
சங்கரி (ரஞ்சனி) பரமேஸ்வரி
(பாண்டிய இளவரசி; சிவனின் அரசியே; அம்மா; சிவன் மனத்தை மகிழ்விப்பவளே; பரமேஸ்வரனின் பாதியே)
வேண்டும் வரம் இன்னும் மனம் இல்லையோ
வேதவேதாந்த நாத ஸ்வரூபினி (ஜகத் ஜனனி)
(வேத வேதாந்த இசை வடிவினளே)

இராகம்: ரதிபதிப்ரியா
தாளம்:ஆதி
இயற்றியவர்: கானம் கிருஷ்ண ஐயர்
பாடியவர்கள்:
உன்னிகிருஷ்ணன், விசாலாக்ஷி நித்யானந்த்
இசைத்தவர்கள்:
குன்னக்குடி வைத்தியநாதன், என்.ரமணி

Sunday, March 25, 2007

சின்னஞ்சிறு பெண் போலே...


சின்னஞ்சிறு பெண் போலே சிற்றாடை இடை உடுத்தி
சிவகங்கை குளத்தருகே ச்ரி துர்கை சிரித்திருப்பாள் (சின்னஞ்சிறு)

பெண்ணவளின் கண்ணழகை பேசி முடியாது
பேரழகுக்கு ஈடாக வேறொன்றும் கிடையாது (சின்னஞ்சிறு)

மின்னலை போல் மேனி அன்னை சிவகாமி
இன்பமெல்லாம் தருவாள் எண்ணமெல்லாம் நிறைவாள்
பின்னல் சடை போட்டு பிச்சிப்பூ சூடிடுவாள்
பித்தனுக்கு இணையாக நர்த்தனம் ஆடிடுவாள் (சின்னஞ்சிறு)

இந்தப் பாடலை சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பாடி எல்லோரும் கேட்டிருப்போம். இணையத்தில் அவர் பாடியது கிடைக்கவில்லை. யாரிடமாவது சுட்டி இருந்தால் தாருங்கள்.

இராகம்: சிந்து பைரவி
தாளம்: ஆதி
இயற்றியவர்: உளுந்தூர்பேட்டை சண்முகம்
பாடியவர்: விஜயலக்ஷ்மி நித்யானந்த்


**



சீர்காழியார் பாடியது இன்று (28 Sept 2011) கிடைத்து இணைத்திருக்கிறேன்.

முதல் வணக்கம்

அன்பு நண்பர்களே. முருகனருள், கண்ணன் பாட்டு குழுப்பதிவுகளைத் தொடர்ந்து அம்மன் பாடல்களை இட இந்த வலைப்பதிவைத் துவங்குகிறேன். இணைந்து அம்மன் பாடல்களை இட விரும்பும் அன்பர்கள் சொல்லுங்கள். அழைப்பை அனுப்புகிறேன்.