சுப்பு தாத்தா சஹானா ராகத்தில் பாடியதைக் கேட்டு மகிழுங்கள்! மிக்க நன்றி தாத்தா!
அயி ககவாஹினி மோஹினி சக்ரிணி
ராகவி வர்தினி ஞானமயே
குணகண வாரிதி லோக ஹிதைஷிணி
ஸ்வரஸப்த பூஷித கானனுதே
சகல சுராசுர தேவ முனீஷ்வர
மானவ வந்தித பாதயுதே
ஜெயஜெய ஹே மதுசூதன காமினி
சந்தானலக்ஷ்மி த்வம் பாலயமாம்.
ராகவி வர்தினி ஞானமயே
குணகண வாரிதி லோக ஹிதைஷிணி
ஸ்வரஸப்த பூஷித கானனுதே
சகல சுராசுர தேவ முனீஷ்வர
மானவ வந்தித பாதயுதே
ஜெயஜெய ஹே மதுசூதன காமினி
சந்தானலக்ஷ்மி த்வம் பாலயமாம்.
கருடனில் வலம் வரும் மோகினியே
கையில் சக்கரம் ஏந்திடும் நாயகியே
உலகத்தின் பந்தங்கள் பற்றுகள்
நீக்கி
ஞானமளித்திடும் உத்தமியே
நற் குண இருப்பிடமானவளே
இந்த அகிலத்திற் அருள் தரும் திருமகளே
இதயத்திற் கிதம் தரும் இன்னிசை
தந்திடும்
ஏழு ஸ்வரங்களும் பணிபவளே
வானவர் யாவரும் தானவர் அனைவரும்
வணங்கிடும் எங்களின் வசுந்தரியே
தவத்தினில் சிறந்திட்ட முனிவரும்
மனிதரும்
பணிந்திடும் பாதங்கள் உடையவளே
மதுசூதனனின் காதலியே
என்றும் ஜய ஜய ஜய
ஜய ஜய முனக்கே
அன்புடன் உன்னடி பணிகின்றோம்
எமை சந்தான லக்ஷ்மியே காத்தருள்வாய்!
--கவிநயா
படத்துக்கு நன்றி: http://www.astromandir.com/mahalakshmiyagya.html