Friday, March 21, 2008

கருணை தெய்வமே கற்பகமே (பங்குனி உத்திரச் சிறப்பு இடுகை)



பங்குனி உத்திரத் திருநாளாகிய இன்று மயிலை கபாலீச்சுரத்தில் அன்னை கற்பகவல்லிக்கும் ஐயன் கபாலீஸ்வரருக்கும் திருமணத் திருவிழா நடைபெறுகிறது. அந்த திவ்ய தம்பதிகளின் திருமண விழாவினை முன்னிட்டு பிரியா சகோதரிகள் சிந்துபைரவி இராகத்தில் பாடிய இந்த இனிய பாடலை இங்கே தருகிறேன்.

திருமண விழாவின் போது அன்னையிடம் வேண்ட வேண்டியவைகளை எல்லாம் இந்தப் பாடலில் வேண்டிக் கொள்ளலாம்.



பெற்றவளும் நீ பெருமை சேர்ப்பவளும் நீ அதி
அற்புதம் விளைக்கும் அன்னையே இரு
பொற்பதங்கள் பணிந்தோம் பரவசமாய் தாயே கருணையே
கற்பகமே என்றும் எங்களைக் காக்க வேணுமே

கருணை தெய்வமே கற்பகமே
காண வேண்டும் உந்தன் பொற்பதமே (என் கருணை)

உறுதுணையாக எம் உள்ளத்தில் அமர்ந்தாய்
உனையன்றி வேறே யாரோ எம் தாய் (கருணை)

ஆனந்த வாழ்வு அளித்திடல் வேண்டும்
அன்னையே எம் மேல் இரங்கிடல் வேண்டும்
நாளும் உன்னை தொழுதிடல் வேண்டும்
நலமுடன் வாழ அருளல் வேண்டும் (கருணை)