Thursday, April 28, 2011
த்ரிபுரசுந்தரி மா (சாயி பஜன்)
த்ரிபுரசுந்தரி மா - அம்ப
தயாஸாகரி மா
சுந்தர வதனி மா - அம்ப
சுகுண மனோகரி மா
ஜய ஜகத்ஜனனி மா - அம்ப
ஜகதோத்தாரினி மா
பர்த்தி நிவாஸினி மா - அம்ப
பாப விமோசனி மா
மூவுலக அழகியே அம்மா - அம்மா
கருணைக்கடலே அம்மா
அழகு முகத்தவளே அம்மா - அம்மா
நற்குணத்தவளே அம்மா
உலகன்னையே அம்மா - அம்மா
உலகை உயர்த்துபவளே அம்மா
பர்த்தியில் வாழ்பவளே அம்மா - அம்மா
பாவத்தை நீக்குபவளே அம்மா
Monday, April 11, 2011
அன்னையே அருந்துணையே!
அன்னையே அருந்துணையே அகிலாண்ட நாயகியே
உண்மையே உறுதுணையே உலகாளும் ஈஸ்வரியே
சரணென் றுனை அடைந்த பின்னே சஞ்சலங்கள் ஏதம்மா?
மரணம் வந்து தழுவும் போதும் நாமம் சொல்லும் நாவம்மா
உனதன்பே அனுதினமும் நான்வேண்டும் வரமாகும்
உன்நினைவே என்னோடு கூடவரும் துணையாகும்
கள்ளமில்லா பிள்ளையன்பை உன்றன்மீது தரவேண்டும்
உன்னையன்றி பிறநினைவெல்லாம் என்னைவிட்டு அறவேண்டும்
--கவிநயா
அடுத்த வாரம் முதல் விடுமுறையில் போறேன். கணினியைத் தொட வாய்ப்பு கிடைப்பது சந்தேகம். விடுமுறை எனக்கு, விடுதலை உங்களுக்கு! :) பிறகு பார்க்கலாம்...
அன்னையின் அருள் அனைவருக்கும் நிறையட்டும்.
Monday, April 4, 2011
ஏதும் அறியேன்...
மெய்ப்பொருள் அறியேனை, திருப்பதம் பணியேனை
விருப்புடன் ஏற்றிடு வாயோ அம்மா?
பொய்ப்பொருள் தனில்ஆழ்ந்து, வினைக்குழி தனில்வீழ்ந்து
மறுகிடும் எனைக்கண்ணால் பாராய் அம்மா
மலைபோல் துயரங்கள் எனைச்சூழ்ந் திருக்கையிலும்
மழைபோல் அழுதிருந்தேன் மங்கையுனை நினைக்கவில்லை
கடல்போல் துயரங்கள் எனைச்சூழ்ந் திருக்கையிலும்
கலங்கித் தவித்திருந்தேன் கன்னியுனை நினைக்கவில்லை
வேதங்கள் யாகங்கள் ஏதும் அறியேனம்மா
யோகமும் தியானமும் செய்யத் தெரியேனம்மா
ஏதுமறியா எனக்கும் உன்னருள் கிடைத்திடுமோ?
பதமலர் சேரும்(அ)ந்த சுகவரம் கிடைத்திடுமோ?
--கவிநயா
சுப்பு தாத்தா செஞ்சுருட்டி ராகத்தில் அமைத்து பாடியிருக்கிறார்... மிக்க நன்றி தாத்தா!
Subscribe to:
Posts (Atom)