Tuesday, January 31, 2017
வா உமையே!
கீதாம்மாவின் இனிய குரலில், மோகன கல்யாணி ராகத்தில்
ஓமென்னும் ப்ரணவத்தின் நாயகியே
உனைத்தானே அழைக்கின்றேன் வா உமையே
(ஓமென்னும்)
கருணை பொழிந்திடும் கருவிழிகள்
உடன் அருள் சுரக்கின்ற திருக் கரங்கள்
முறுவல் நெளிகின்ற கனியிதழ்கள்
கண்டவுடன் ஓடிவிடும் வல்வினைகள்
(ஓமென்னும்)
முடி முதல் அடி வரை எழில் பொங்கும், எந்தன்
சிந்தையெங்கும் மதிமுகத்தின் ஒளி தங்கும்
ஆதி சிவன் ஒரு புறத்தில் அவள் பங்கும்
எண்ண எண்ண நெஞ்சமெங்கும் இன்பம் பொங்கும்
(ஓமென்னும்)
--கவிநயா
Tuesday, January 24, 2017
போற்றி போற்றி!
கீதாம்மாவின் இனிய குரலில், ராகமாலிகையில்
அம்மா போற்றி அகிலம்
ஆளும் ஈஸ்வரியே போற்றி
அண்டம் பிண்டம் அனைத்தும் நீயே அருள்வடிவே போற்றி
அண்டம் பிண்டம் அனைத்தும் நீயே அருள்வடிவே போற்றி
மதுரை ஆளும் மீனாட்சி
உன் மீன் விழிகள் போற்றி
காஞ்சியிலே வளர்
காமாட்சி உன் கரு விழிகள் போற்றி
(புதுக்)கோட்டையிலிருந்து
புவனம் ஆளும் புவனேஸ்வரி போற்றி
புண்ணிய பூமி காசியிலே
வாழ் விசா லாட்சி போற்றி
திரு மியச்சூரில்
திருவாய் விளங்கும் லலிதாம்பிகை போற்றி
(திரு)வானைக் காவின்
நாயகியே அகிலாண்டேஸ்வரி போற்றி
தில்லைப் பதியில்
அன்னை சிவகாமி திருப்ப பதங்கள் போற்றி
திருக் கடவூரில்
அபிராமி அவள் அருட் பதங்கள் போற்றி
திரு மயிலையிலே மயில்
வடிவாய் வந்த கற்பகத் தாய் போற்றி
மாங்காட்டினிலே ஒற்றை
விரலில் தவமிருந்தாய் போற்றி
அங்கும் இங்கும்
எங்கும் நீயே திருவடிகள் போற்றி
எந்தன் நெஞ்சில்
என்றென்றும் நீ தங்கிடுவாய் போற்றி!
--கவிநயா
Monday, January 16, 2017
வாராயோ?
கீதாம்மாவின் இனிய குரலில், ஆரபி ராகத்தில்
திருமுகம் நினைந்துய்ய
திருவடி பணிந்துய்ய
ஒரு வரம் தாராயோ, உன்னைப்
பெறும் வரம் தாராயோ?
பாதத் துளியாலே நடக்கும் தொழிலெல்லாம்
வேதப் பொருளாளே கடைக்கண் பாராயோ?
வேழ முகத்தோனைக் காக்கும் தாயானாய்
சேவற் கொடியோனின் கரத்தில் வேலானாய்
நானும் உன் பிள்ளை, எனை நீ மறந்தாயோ
போதும் கடுந்துன்பம், விரைந்தே
வாராயோ?
--கவிநயா
Monday, January 9, 2017
உன் நினைவாலே...
கீதாம்மாவின் உருகும் குரலில், ஸ்ரீ ராகத்தில் மிக்க நன்றி அம்மா!
உன் நினைவாலே நான் வாழுகிறேன்
உன் அருளாலே தான் பாடுகிறேன்
(அம்மா, உன் நினைவாலே)
உன் திருமுகம் நினைந்து… உன்
திருப்பதம் பணிந்து
உன்னை தினம் பூசித்து… உன்னருளை
யாசித்து
(அம்மா, உன் நினைவாலே)
தாமரை மலர் முகம் என்… மனக் குளத்தில்
மிதக்கும்
சோதனை எது வரினும்… உன் நினைவில்
மறக்கும்
பூரண நிலவெழிலாய்… மங்கை முகம்
இருக்கும்
பொங்கி வரும் புன்னகையில்… மூவுலகும்
ஜொலிக்கும்
(அம்மா, உன் நினைவாலே)
--கவிநயா
Tuesday, January 3, 2017
உன்னையன்றி கதியேது?
அனைவருக்கும் இனிய புது வருட வாழ்த்துகள்! அன்னையீன் அருள் அனைவருக்கும் சிறக்கட்டும்!
கீதாம்மாவின் உருக்கும் குரலில்... மிக்க நன்றி கீதாம்மா!
உன்னையன்றி கதியேது உமையவளே, உந்தன்
பதமன்றி புகலேது இமவான் திருமகளே
(உன்னையன்றி)
விதி செய்யும் விளையாட்டில் மதி கலங்கி மயங்கி
நாதியற்று இவ்வுலகில் நலிந் துழலும் எனக்கு
(உன்னையன்றி)
விண்ணிலொரு மதி போல எண்ணந்தனில் நீ ஒளிர்வாய்
பண்ணுகின்ற தமிழ்ப் பாட்டில் பண்ணின் மணியாய் வருவாய்
உன் நினைவில் ஆழுதற்கு உமையவளே அருள்வாய்
என் நினைவில் வாழுதற்கு இக்கணமே வருவாய்
(உன்னையன்றி)
--கவிநயா
கீதாம்மாவின் உருக்கும் குரலில்... மிக்க நன்றி கீதாம்மா!
உன்னையன்றி கதியேது உமையவளே, உந்தன்
பதமன்றி புகலேது இமவான் திருமகளே
(உன்னையன்றி)
விதி செய்யும் விளையாட்டில் மதி கலங்கி மயங்கி
நாதியற்று இவ்வுலகில் நலிந் துழலும் எனக்கு
(உன்னையன்றி)
விண்ணிலொரு மதி போல எண்ணந்தனில் நீ ஒளிர்வாய்
பண்ணுகின்ற தமிழ்ப் பாட்டில் பண்ணின் மணியாய் வருவாய்
உன் நினைவில் ஆழுதற்கு உமையவளே அருள்வாய்
என் நினைவில் வாழுதற்கு இக்கணமே வருவாய்
(உன்னையன்றி)
--கவிநயா
Subscribe to:
Posts (Atom)