"நீயே கதி ஈஸ்வரி"
- என்ற புகழ் பெற்ற பாடல்; (சினிமாப் பாட்டு தான் - இருந்தாலும் மன்னிச்சிக்கோங்க)
இந்தப் பாடலின் youtube காணொளியில், அன்னையின் அருகே உள்ள "பாவை விளக்கு"களைச் சற்றுக் கவனிச்சிப் பாருங்க;
எங்கள் கிராமத்து வீட்டிலும் இவள் உண்டு; மிக மிக அழகு;
ஆனால் "வீட்டுக்கு ஆகாது", கோயிலில் மட்டும் தான் ஏத்தணும்-ன்னு யாரோ ஒரு கோயில் ஐயர் சொல்லக் கேட்டு.. ஏனோ அம்மா ஏற்றுவதில்லை; வீட்டில் குத்து விளக்கு மட்டுமே;
"அவளைக்" கிராமத்திலேயே "அம்போ" -ன்னு விட்டு வந்துட்டோம்:(
"சக்தி" என்ற உலக அன்னை; அவளை மீறி, வெறும் ஒரு பாவை விளக்கா, என்னை ஆகாமல் செய்து விடும்?
பாதி fuse போன electric குத்து விளக்கெல்லாம் வைக்குறாங்க; தப்பில்லை; ஆனா எழிலார் பாவை விளக்கு??:(
இப்பவும் நியுயார்க்கிலிருந்து கிராமத்துக்குப் போகும் போதெல்லாம் (அ) வீட்டில், அம்மா நோன்பு எடுக்கும் போதெல்லாம் (கேதார கெளரி நோன்பு)... இந்தப் பாவை விளக்கை ஏத்தி வைப்பேன்;
பூசையறையில் தானே வைக்கப்படாது?
புழக்கடைக் கிணற்றடியில், பூவாடைக்காரிக் கல்லு ஒன்னு இருக்கும்; அது பக்கத்துல கொண்டு போய் வச்சிருவேன்;
ஒயிலான உருவத்தைப் பளபள-ன்னு துலக்கி,
மஞ்ச பூசி, திருநீறும்-பொட்டும் வச்சி, அவ தலையில் பூ வச்சி,
அவ கையில் விளக்கேத்தினா... = என் முருகனை விட செம அழகா இருப்பா;
என் மனசுக்கு மிகவும் பிடிச்ச பாவை விளக்கு!
= அதை ஏத்தும் போது, நானே அந்தப் பாவை போல் தோனும்;
= தாயே - நான், உன் கண்ணில் "பாவை" அன்றோ?
நீயே கதி ஈஸ்வரி
சிவ காமி தயா சாகரி - எனக்கு
(நீயே கதி ஈஸ்வரி)
மாயா உலகிலே ஓயாத துயராலே
வாடாமலே ஒரு வழிகாட்டவே - எனக்கு
(நீயே கதி ஈஸ்வரி)
ஆவியே அமுதே ஆகமப் பொருளே
அன்புடன் தாராயோ உன் திருவருளே
ஆவதும் அழிவதும் யாவும் உன்னாலே
அன்னையே பாராயோ என்னையும் கண்ணாலே
தீயவர் வாழவும் நல்லவர் தாழவும்
செய்வதேனோ? இது தர்மம் தானோ? - அம்பா
(நீயே கதி ஈஸ்வரி)
படம்: அன்னையின் ஆணை
வரிகள்: மருதகாசி
குரல்: பி. லீலா
இசை: SM சுப்பையா நாயுடு (சிங்கார வேலனே தேவா புகழ்..)
பொதுவா, மணமான பெண்கள், புகுந்த வீட்டுக் குறையெல்லாம், அம்மா கிட்ட சொல்லித் தான் ஏங்குவாங்க!
ஆனா... சில "லூசு" பொண்ணுங்களும் ஒலகத்தில் இருக்குதுங்க; அம்மா கிட்ட கூடச், சொல்லாம மறைச்சிருங்க;
ஏன்-ன்னா....
அவனுக்கு = "இழுக்கு" ஆயீறக் கூடாது!
முருகா, நானும் உன்னைப் பத்தி, அம்மா கிட்ட சொல்லப் போறதில்ல;
ஆனாலும்....
இந்தப் பாவை விளக்காப் பேசுறேன்:
அம்மா, உனக்கு விளக்கேந்தி நிக்குறேனே?
என் வாழ்வுக்கும், ஒரு விளக்கேத்த மாட்டியா?
சிவ - காமி , தயா சாகரி
எனக்கு ... நீயே... கதி ஈஸ்வரி!
subbu thaatha has sent his song rendering; link = here
