துன்பமெல்லாம்
ஓடுமடி
துக்கமெல்லாம்
தீருமடி, தன்னாலே, அந்த
சுவர்க்கம் வந்து
சேருமடி முன்னாலே
(துர்க்கை)
சூலமேந்தி வருகையிலே
கோபங் கொண்ட காளியவள்
கோலவிழிப் பார்வையினால்
உலகைக் காக்கும்
தாயுமவள்
(துர்க்கை)
ஞானியராய் இருந்தாலும்
மாயையிலே இழுத்திடுவாள்
மோகத்திலே வீழ்த்திடுவாள்
ஞானத்தையும் அளித்திடுவாள்
தீமை ஏழ்மை அச்சம்
இவை
யாவற்றையும் அழித்திடுவாள்
தம்மை எண்ணித்
தொழுபவர்க்கு
நன்மையெல்லாம்
அளித்திடுவாள்
(துர்க்கை)
--கவிநயா