Monday, February 26, 2018

திருவான்மியூர் அரசி



சுப்பு தாத்தா வின் இசையில், குரலில், ஆரபி ராகத்தில்... மிக்க நன்றி தாத்தா!

கீதாம்மா வின் இனிய குரலில்... மிக்க நன்றி கீதாம்மா!

திருவான்மியூர் அரசி, திரிபுர சுந்தரி
மருந்தீஸ்வரர் மனைவி வினையெல்லாம் வந்தரி
(திரு)

தேவரும் மூவரும் தொழுதிட்ட வான்மியூர்
தேவாதி தேவனுடன் தேவி துணை நின்றவூர்
(திரு)

இருகரு விழிகளில் ததும்பிடும் அன்பினில்
உலகத் துயர் விலகும் நிம்மதி மனதினில்
திருமுகத்தில் தவழும் புன்னகை எழிலினில்
இதயம் தனை மறந்து லயிக்கும் உன் நினைவினில்
(திரு)

--கவிநயா

Tuesday, February 20, 2018

கற்பகத் தாயே!



கீதாம்மா வின் இனிய குரலில்... மிக்க நன்றி கீதாம்மா!

கற்பகத் தாயே கதி நீயே
பொற்பதம் தந்தெமைக் காப்பாயே
(கற்பக)

மயிலாபுரி வந்தாய் மயிலாக
கயிலாபுரி அழகி ஒயிலாக
(கற்பக)

திருவடி மலரினை தினந்தினம் நுகர்ந்திடவும்
திருப்பெயரின் ருசி நாவினில் திகழ்ந்திடவும்
பல நாள் உனை அழைத்தேன் பலவாறாய்
நீ அதனைக் கேட்டுன் முழுமதி முகம் காட்டு
(கற்பக)


--கவிநயா

Monday, February 5, 2018

மன்னு புகழ் மதுரையிலே

கீதாம்மா வின் இனிய குரலில், இன்னொரு ராகத்தில்... மிக்க நன்றி கீதாம்மா!

மன்னு புகழ் மதுரையிலே
மின்னி நிற்கும் மீனாட்சி !!
நின்
விண்ணளவும் மாளிகையில் ஏனோ
வலம் வந்த அக்னி காட்சி ?
Image result for fire in meenakshi temple images
நெல் பயிர் நிலங்களிலே
புல் பல களைவது போலே
நல்லது நடுவினிலே
அல் அதனைக் களைந்தாயோ ?
அக்கினி தேவனை
அழைத்தாயோ !