அன்னையின் அருள் என்றென்றும் நிறைந்திருக்கட்டும்!
சுப்பு தாத்தா பைரவி / முகாரியில் உளமுருகப் பாடியிருப்பது இங்கே... மிக்க நன்றி தாத்தா!
என் குரல் உன் காதில் விழுகிறதோ, இல்லை
காற்றினில் தடம் மாறி அலைகிறதோ?
(என் குரல்)
தாயுன்னை அழைக்கின்றேன் தமிழாலே,
கொஞ்சம்
சேயென்னைப் பாராயோ அருளாலே?
(என் குரல்)
காலைச் சுற்றி வருகின்றேன் காவாயோ?
கடும்
பாலைதனில் உனதருளைப் பொழியாயோ?
வேலையென்று வேறில்லை என் தாயே,
உன்னருள்
வேண்டுவதே என்வேலை அறியாயோ?
(என் குரல்)
--கவிநயா
--கவிநயா