அன்பாலே அபிஷேகம் செய்தேனம்மா
அருளாலே அதை ஏற்று மகிழ்வாயம்மா
உன்பாலே மனம் வைத்தேன் அறிவாயம்மா
என்பாலே உளமிரங்கி வருவாயம்மா
(அன்பாலே)
பாலாபி ஷேகங்கள் பாலாம் பிகை
உனக்கே
பால் வெள்ளை உள்ளம் தந்து அருள்வாய்
நீ அதற்கே
தேனாபி ஷேகங்கள் தேவி உன் திரு
வடிக்கே
தேடி அழைப்ப வர்க்கு தாளிணை தருவதற்கே
(அன்பாலே)
பஞ்சாமிர் தபிஷேகம் பாவை உன்
பதங்களுக்கே
பக்தர்தமை பத்திரமாய் காத்திடுவாய்
நீ அதற்கே
மஞ்சளால் அபிஷேகம் மங்களாம் பிகை
உனக்கே
மங்கல மதிவதனம் கண்டு கண்டு மகிழ்வதற்கே
(அன்பாலே)
--கவிநயா