Monday, May 15, 2017

என்ன விளையாட்டு?




சுபபந்துவராளி ராகத்தில் கீதாம்மாவின் தேனினிய குரலில்.... மிக்க நன்றி கீதாம்மா!
ரொம்ப நாளுக்கப்புறம் சுப்பு தாத்தா  பாடித் தந்திருக்கிறார். அவசியம் கேளுங்கள்! மிக்க நன்றி தாத்தா!

என்ன உன் விளையாட்டு தாயே? எந்தன்

வாழ்வினைக் களமாக்கி மகிழ்பவள் நீயே

(என்ன)



மாயையின் வடிவினளாய் மதிமயக்கம் தருவாய்

ஞானத்தின் வடிவினளாய் மாயத்திரை விலக்கிடுவாய்

(என்ன)



நித்தம் உன்னை நினைந்தும் சித்தமும் கலங்குவதேன்?

பித்துப் பிடித்தது போல் புத்தியும் மயங்குவதேன்?

மாய வடிவை விட்டு மதி மயக்கம் தீராய்

ஞானத்தின் வடிவெடுத்து நல் வழியைத் தாராய்

(என்ன)


--கவிநயா 


Monday, May 8, 2017

அன்னை உன்னை நினைத்தால்!



கீதாம்மா தன் இனிய குரலில்...சாவேரி ராகத்தில்... மிக்க நன்றி கீதாம்மா!

நினைத்த காரியம் கை கூடும்

நடக்கும் யாவையும் நலமாகும்

அன்னை உன்னை நினைத்தால்

உந்தன் அன்பில் திளைத்தால்

(நினைத்த)



வித்தைகள் யாவையும் கைசேரும்

சத்தியம் நெஞ்சிலே நிலையாகும்

அன்னை உன்னை நினைத்தால்

உந்தன் அன்பில் திளைத்தால்

(நினைத்த)



பக்திநம் மனதிலே பயிராகும்

சித்தம் எல்லாம் சிவை மயமாகும்

அன்னை உன்னை நினைத்தால்

உந்தன் அன்பில் திளைத்தால்

(நினைத்த)



பித்தம் எல்லாம் நீயே என்றாகும்

முக்தியும் கூட நம் வசமாகும்

அன்னை உன்னை நினைத்தால்

உந்தன் அன்பில் திளைத்தால்

(நினைத்த)


--கவிநயா 


Monday, May 1, 2017

எல்லாம் உனதருளாலே!



கீதாம்மா தன் இனிய குரலில்...ஆபோகி ராகத்தில்... மிக்க நன்றி கீதாம்மா!

எல்லாம் உனதருளாலே, இந்த

இயற்கையும் உனதருளாலே

உயிர்களும் உனதருளாலே, அவை

வாழ்வதும் உனதருளாலே

(எல்லாம்)



சுவாசிக்கும் காற்றும், அருந்திடும் நீரும்,

தாங்கிடும் புவியும், உன்னாலே

ஆகாய வெளியும், சூர்ய சந்திரரும்,

அக்கினியும் உன்னருளாலே

(எல்லாம்)



பலப்பலப் பிறவியும், இன்பமும் துன்பமும்,

இறப்பதும் நிகழ்வது உன்னாலே

விதியினில் உழல்வதும், விடுபட்டு எழுவதும்

உன்பதம் சேர்வதும் உன்னருளாலே

(எல்லாம்)


--கவிநயா