Monday, October 27, 2014

ஸ்ரீ சக்ர நாயகி



சுப்பு தாத்தா மத்யமாவதி ராகத்தில் ரசித்துப் பாடியிருப்பது இங்கே.... மிக்க நன்றி தாத்தா!



திருமீயச் சூரினிலே
திருக்கொலு விருப்பவளே
திருமுக தரிசனம் தாராயோ?
கருவிழியால் என்னைப் பாராயோ?
(திருமீயச்சூரினிலே)

ஸ்ரீசக்ர பீடத்தில்
அருளாட்சி செய்பவளே, என்
அகச் சக்கரம் அமர்ந்து
அருள வேண்டும் நாயகியே

அகத்திய முனிவருக்கு
அன்பு செய்த அம்பிகையே, என்
அகத்தினில் வந்தென்னை
ஆண்டு கொள்வாய் கண்மணியே
(திருமீயச்சூரினிலே)

சுந்தரன் மனங்கவர்ந்த
சௌந்தரியே வருவாய்
மேக நாதன் உடன்
மேதினிக்கு அருள்வாய்

கொலுசுகள் குலுங்கிட
கோமகளே வருவாய்
சிரசினைப் பதம் வைத்தேன்
செஞ்சுடரே அருள்வாய்
(திருமீயச்சூரினிலே)


--கவிநயா


படத்துக்கு நன்றி: தினமணி

Monday, October 20, 2014

திருமயிலை கற்பகமே!

சுப்பு தாத்தா மிக இனிமையாகப் பாடித் தந்தது... மிக்க நன்றி தாத்தா!



உன்னைக் கண்டு முறையிடவே வந்தேன்
திருமயிலை கற்பகமே
(உன்னைக்)

குறைகளெல்லாம் மறந்ததம்மா
மலர்முகத்தைக் கண்டதுமே
பிறையணிந்த நாயகியுந்தன்
திருமுகத்தைக் கண்டதுமே
(உன்னைக்)

மயிலுருவில் வந்தவளே
மகவைக் கொஞ்சம் பாராயோ?
மயிலறகாய் இதயம் வருடி
மதி மயக்கம் தீராயோ?
(உன்னைக்)

--கவிநயா

படத்துக்கு நன்றி: http://thirumylai.blogspot.com/2011/09/2.html

Tuesday, October 7, 2014

பராசக்தி வணக்கம்




பராசக்தி வணக்கம் 
[ மகாகவியின் பாஞ்சாலி  சபதம் ]  


ஆங்கொரு கல்லை வாயிலிற் படி என் 


        றமைத்தனன் சிற்பி , மற்றொன்றை 


ஓங்கிய பெருமைக் கடவுளின்  வடிவென் 


        றுயர்த்தினான் ; உலகினோர் தாய் நீ !


யாங்கணே ,எவரை ,எங்ஙனஞ்சமைத்தற்


        கெண்ணமோ , அங்ஙனம் சமைப்பாய் .


ஈங்குனைச்  சரணென் றெய்தினேன் ; என்னை 


         இருங்கலைப்  புலவனாக் குதியே .

Wednesday, October 1, 2014

சரணம் சரணம் சரஸ்வதி !



சரணம் சரணம் சரஸ்வதி !
ஞாலமெல்லாம் போற்றும் நாமகளே!
ஞானவொளியால் நீ  நீக்கு மனமருளே.


செங்கமலத்துதித்த  சதுர்முகன் பத்தினி !
வெண்கமலம் அமர்ந்து  உலகாளும் உத்தமி !
வெண்ணன்ன வாகினி!வரப்ரதாயினி !
வெண்கலையில் மின்னுந்தேவி !சுஹாசினி !
ஞாலமெல்லாம் போற்றும் நாமகளே!
ஞானவொளியால் நீ  நீக்கு மனமருளே.


ஏட்டுச்  சுவடியும்   , அக்ஷர  மாலையும் 
ஏந்திடுங்கரத்தாளே !பணிந்தேனுன்  பூந்தாளே !
மெய்ஞான வாரிதியே !பாராளும் பாரதியே !
ஸ்ருங்ககிரி சாரதையே!சரணம் சரஸ்வதியே !
ஞாலமெல்லாம் போற்றும் நாமகளே!
ஞானவொளியால் நீ  நீக்கு மனமருளே.