Monday, September 24, 2012

நீயின்றி நானில்லை!



சுப்பு தாத்தா பாடித் தந்தைக் கேட்டு மகிழுங்கள்! மிக்க நன்றி தாத்தா! 


நீரின்றி மீனில்லை
நிலமின்றி பயிரில்லை
தாயின்றி சேயில்லை அம்மா
நீயின்றி நானில்லை அம்மா!

விதையின்றி மரமில்லை
கடலின்றி அலையில்லை
வினையின்றி பிறப்பில்லை அம்மா
நீயின்றி நானில்லை அம்மா!

பொறியாக வந்தாய்
தீயாய் வளர்ந்தாய்
புரியாத போதும்
நிலையாக நின்றாய்!

நினையாத போதும்
நீயெந்தன் தாயே
நினைக்கின்ற போதெல்லாம்
நானுந்தன் சேயே!


--கவிநயா

Wednesday, September 19, 2012

தாயின் ஊடல் தீர்த்த சேய் !

(thanks :google for picture )

         ஊடி நின்ற உமையை சமாதானப்படுத்த சிவனார்
அவளடி பணிய,ஐயன் சூடிய நிலவின் வெண்கதிரை
அன்னையின் பாதகமலத்தில் கண்ட கரிமுகக் குழந்தை,
அதனைத் தான் விரும்பியுண்ணும் தாமரைத்தண்டின்
நூல்கற்றை என எண்ணி தும்பிக்கையால் பிடித்திழுக்க
முயல,பிள்ளையின் இந்த சேட்டையைக் கண்ட
பெற்றோர் அவனைக் கட்டி அணைக்கையில்,
யதேச்சையாக ஏற்பட்ட பதியின் திவ்யஸ்பர்சத்தில்
உமை ஊடல் தீர்ந்ததாய்ச்சொல்லும் ஒருசம்ஸ்க்ருத
கவிதை படித்தேன்!

      அன்னையின் ஊடலுக்குக் காரணம் என்னவாயிருக்கும்
என்று நான் கற்பனை செய்ததன் விளைவே கீழுள்ள
என் பாடலின் முதல் ஐந்து பதங்கள்! அடுத்த மூன்று
பதங்களும் அந்த சம்ஸ்க்ருதகவிதையைத்
தழுவி நான் எழுதிய வரிகள்!


தாயின் ஊடல் தீர்த்த சேய் !

(subbusir sings:
  http://www.youtube.com/watch?v=IKnKaCAcO4A&list=UUw4TCj3_an8TqdGY6TNaixA&index=1&feature=plcp)


கதம்பவனந்தனிலே ஒருநாள் ..கண்ணன்
மயில்முகுடம் நடுங்கப்படுவேகமாய்ச் சென்றான்!
வனமாலி வனத்திலென்ன கண்டான்?-அவன்
தலைதெறிக்க மூச்சிரைக்க எதைப்பிடிக்கச்சென்றான்? (1)

கண்டான் கருநாகம் கிரிதாரி !.."காளிங்கன்

மீண்டும் உயிர்த்தெழுந்து விட்டானோ?"என்றே
ஐயுற்று அதன்தலையிலேறி --தை தை
தை என்று குதித்தாட ஓடியோடிச் சென்றான் ! (2)

உண்மையறிந்தான் அண்மை சென்று..தான்
கண்டது தங்கையின் கருங்கூந்தல் என்று!
நடந்ததெண்ணி நகைத்தான் அண்ணல்...அன்புத்
தங்கையும் பூத்தனளோர் புன்னகை மின்னல்! (3)

அன்னையின் மின்முறுவல் கண்டு ..அவள்
பொன்மேனியில் தவழும் வெண்முத்துமாலை,
நாணிச்சிவந்து நிறம் மாற .."இந்த
மாணிக்கமாலை ஏது?"என மயங்கினன் மகிழ்நன் ! (4)

"நானிட்ட முத்தாரம் நீக்கி ..இந்த
மாணிக்கமாலை அணிவித்ததார்?"என்றே
ஐயுற்றாற்போல் ஐயன் வினவ ..கேட்ட
தையலோ ஊடலுற்று நின்றாள் முகந்திருப்பி ! (5)

ஊடல் தீர்க்க உளங்கொண்டே.-உமையின்
பாதந்தனில் பதித்தான் பரமன் திருச்சென்னி;
தலைதங்கும் நிலவின் ஒளிக்கதிரால்-தலைவி
திருவடித்தாமரையில் வெண்ணொளி மின்ன! (6)

வெண்கதிர் செங்கழலில் ஒளிர --கண்ட
ஐங்கரன் தாமரைநூலென மயங்கி
நீட்டி நின்றான் துதிக்கை தன்னை ..நூலை
எட்டிப் பிடித்திழுத்து உண்டு களித்திடவே ! (7)

சேய் செய்யும் சேட்டைதனைக்கண்டு ..தெய்வத்
தாய் தந்தை இருவரும் குஞ்சரனைத் தழுவ ,
குழந்தை மெல்ல நழுவிச் செல்ல ..பதியின்
தழுவலில் தணிந்தனள் தையலவள் ஊடல்! (8)

(கணேசக்கடவுளின் ஷோடசநாமத்
   தமிழ்த்துதி கேட்க:
http://myprayers-lalitha.blogspot.in/2011/08/blog-post_31.html  )

Tuesday, September 18, 2012

அஷ்டலக்ஷ்மி ஸ்தோத்ரம் தமிழில் 8





திமிதிமி திந்திமி திந்திமி திந்திமி
துந்துபி நாத ஸுபூர்ணமயே
குமகும கும்கும கும்கும கும்கும
ஷங்கநி நாதஸு வாத்யனுதே
வேத புராண திஹாச ஸுபூஜித
வைதிக மார்க ப்ரதர்ஷயுதே
ஜெயஜெய ஹே மதுசூதன காமினி
தனலக்ஷ்மி ரூபேண பாலயமாம்
.


திம்திமிதிம்திமிதிம்திமிதிம்திமி
            திம்திமிதிம்திமிஎன்றொலிக்கும்
துந்துபிநாதங்கள்முழங்கிடவே
            எழில்பூரணியாகத்திகழ்பவளே
கும்குமகும்குமகும்குமகும்கும
            கும்குமகும்குமஎன்றொலிக்கும்
சங்கத்தின்கம்பீரநாதத்தின்நடுவில்
            மங்களவடிவாய்த்திகழ்பவளே
வேதபுராணதிகாசங்களெல்லாம்
            பணிந்திடத்திகழும்பங்கயமே
அடியவர்க்கெல்லாம்சத்கதிமார்க்கத்தைக்
            காட்டியருளிடும்அன்னையளே
மதுசூதனனின்காதலியே
என்றும்ஜயஜயஜயஜயஜயமுனக்கே
அன்புடன்உன்னடிபணிகின்றோம்
            எமைதனலக்ஷ்மியேகாத்தருள்வாய்! 


--கவிநயா

இத்துடன் அஷ்டலக்ஷ்மி ஸ்தோத்திரத்தின் தமிழாக்கம் நிறைவுறுகிறது. அன்னையின் திருவடிகள் சரணம்.

எனக்காகப் பதிவிட்ட சுப்பு தாத்தாவிற்கு மனமார்ந்த நன்றிகளும் பணிவன்பான வணக்கங்களும்.


Monday, September 10, 2012

அஷ்டலக்ஷ்மி ஸ்தோத்திரம், தமிழில் - 7




சுப்பு தாத்தா பந்துவராளியில் பாடியதைக் கேட்டு மகிழுங்கள்! மிக்க நன்றி தாத்தா!

ப்ரணத ஸுரேஷ்வரி பாரதி பார்கவி
சோக விநாஷினி ரத்னமயே
மணிமய பூஷித கர்ண விபூஷண
ஷாந்திஸமாவ்ருத ஹாஸ்யமுகே
நவநிதி தாயினி கலிமல ஹாரிணி
காமித ஃபலப்ரத ஹஸ்தயுதே
ஜெயஜெய ஹே மதுசூதன காமினி
வித்யாலக்ஷ்மி சதா பாலயமாம்
.

தேவர்கள் வணங்கிடும் தேவியளே
            பிருகுவின் புதல்வியே பாரதியே
சோகங்கள் யாவும் தீர்ப்பவளே
எழில் இரத்தி னம்போல ஒளிர்பவளே
செவிகளில் தாடங்கம் விளங்கிடவே
            பொன்னா பரணங்கள் ஒளிர்ந்திடவே
சாந்தியின் இருப்பிட மானவளே
            மலர்ப் புன்னகை வதனம் கொண்டவளே
நவ நிதிகளையும் அளிப்பவளே
            கொடும் கலியிடமிருந்து காப்பவளே
கரங்களில் அபய வரதங்கள் தாங்கி
            விரும்பிய யாவும் தருபவளே
மதுசூதனனின் காதலியே
என்றும் ஜய ஜய ஜய ஜய ஜய முனக்கே
 அன்புடன் உன்னடி பணிகின்றோம்
            எமை வித்யா லக்ஷ்மியே காத்தருள்வாய்!


--கவிநயா

படத்துக்கு நன்றி: http://www.astromandir.com/mahalakshmiyagya.html

Monday, September 3, 2012

அஷ்டலக்ஷ்மி ஸ்தோத்திரம், தமிழில் - 6




சுப்பு தாத்தா அடானா ராகத்தில் பாடியதை இங்கே கேட்கலாம்! மிக்க நன்றி தாத்தா!



ஜெய கமலாசனி ஸத்கதி தாயினி
ஞான விகாஸினி கானமயே
அனுதின மர்ச்சித குங்கும தூசர
பூஷித வாஸித வாத்யனுதே
கனகதா ராஸ்துதி வைபவ வந்தித
ஷங்கர தேசிக மான்யபதே
ஜெயஜெய ஹே மதுசூதன காமினி
விஜயலக்ஷ்மி சதா பாலயமாம்
.

இதயமாம் கமலத்தில் வசிப்பவளே   
            மேல் உலகத்தில் சத்கதி அளிப்பவளே
நாதத்தின் வடிவாய் இருப்பவளே
            அஞ் ஞானத்தை நீக்கி அருள்பவளே
அனுதினம் அர்ச்சிக்கும் குங்குமத்தாலே
            அழகுடன் சிவந்து திகழ்பவளே
மங்கள வாத்யங்கள் மந்திரமுடனே
            பூசைகள் ஏற்று மகிழ்பவளே
கனகதாரா என்னும் துதியினில் மகிழ்ந்து
            கனக மழை பொழிந்த கண்மணியே
சங்கரர் தேசிகன் தோத்திரங்களிலே
            மனங் குளிர்ந்த ருளிய மாதவியே
மதுசூதனனின் காதலியே
என்றும் ஜய ஜய ஜய ஜய ஜய முனக்கே
 அன்புடன் உன்னடி பணிகின்றோம்
            எமை விஜய லக்ஷ்மியே காத்தருள்வாய்! 


--கவிநயா 

படத்துக்கு நன்றி: http://www.astromandir.com/mahalakshmiyagya.html