அன்பைத்
தருவாய் அம்மா
அன்பைத்
தருவாய், உன்றன்
திருப்பாத
கமலங்களில்
அன்பைத்
தருவாய்
(அன்பை)
உன்
நினைவில் வாழ்ந்திடவே
அன்பைத்
தருவாய்
உலகப்
பற்றை அறுத்து உன்மேல்
அன்பைத்
தருவாய்
(அன்பை)
செவ்வந்தி
வானம் போல தேவி உன் நிறம்
செந்தூரம்
துலங்கிடவே ஒளிரும் உன் முகம்
செக்கச்
சிவந்த பட்டாடை உன்றன் இடையினில்
செங்கமலப்
பதம் பதிப்பாய் என்றன் நெஞ்சினில்
(அன்பை)
--கவிநயா