Monday, March 28, 2011

வரமொன்றும் வேண்டாம்!வரமொன்றும் வேண்டாம் – உன்
வரவொன்றே வேண்டும்
அம்பிகை ஈஸ்வரியே – உன்னை
நம்பினேன் பார்வதியே
(வர)

திருப்பத நிழலினில் இளைப்பாற வேண்டும்
விருப்புடன் உன்றன் புகழ் தினம் பாட வேண்டும்
(வர)

நீண்ட நெடுங் கடலினில் நீந்திமிகக் களைத்திட்டேன்
மீண்டு வரும் வழியேதும் காணாமல் திகைத்திட்டேன்

மந்திரம் போலவே மங்கையுன் நினைவு தந்தாய்
தந்திர மாயெனது நெஞ்சமலர் கொய்து சென்றாய்

விந்தை யிலும் விந்தை கண்டேன்
துன்பத் திலும் இன்பம் கண்டேன்

சொந்தமென உன்னைக் கொண்டேன்
சேவடிகள் போற்றி நின்றேன்
(வர)

--கவிநயா

சுப்பு தாத்தா குரலில், இசையில், தேவகாந்தாரி ராகத்தில்... மிக்க நன்றி தாத்தா!

Monday, March 21, 2011

அஷ்டலக்ஷ்மி ஸ்தோத்ரம்

அஷ்டலக்ஷ்மி ஸ்தோத்ரம் தமிழில் தேடிய போது கிடைக்கலை. (எனக்கு ஆங்கிலத்தில் எழுதி படிப்பதை விட தமிழில் படிக்கிறதுதான் சுலபம் போல தோணும் :). அதனால ஆடியோவில் கேட்டு தமிழில் எழுதினேன். தவறு இருந்தால், தெரிந்தவர்கள் திருத்தும்படி கேட்டுக்கறேன். என்னைப் போல தேடுபவர்களுக்கு பயன்படுமே என்று இங்கே இடறேன்...கேட்டுக்கிட்டே படிக்கலாம்...

சுமனஸவந்தித சுந்தரி மாதவி
சந்த்ர சஹோதரி ஹேமமயே
முனிகண மண்டித மோக்ஷ ப்ரதாயினி
மஞ்சுள பாஷிணி வேதனுதே
பங்கஜ வாசினி தேவஸு பூஜித
சத்குண வர்ஷிணி சாந்தியுதே
ஜெயஜெய ஹே மதுசூதன காமினி
ஆதிலக்ஷ்மி சதா பாலயமாம்

அயிகலி கல்மஷ நாஷினி காமினி
வைதிக ரூபிணி வேதமயே
க்ஷீர சமுத்பவ மங்கள ரூபிணி
மந்த்ர நிவாஸினி மந்த்ரனுதே
மங்கள தாயினி அம்புஜ வாஸினி
தேவ கணாஷ்ரித பாதயுதே
ஜெயஜெய ஹே மதுசூதன காமினி
தான்யலக்ஷ்மி சதா பாலயமாம்

ஜெயவர வர்ஷிணி வைஷ்ணவி பார்கவி
மந்த்ர ஸ்வரூபிணி மந்தரமயே
ஸுரகண பூஜித ஷீக்ர ஃபலப்ரத
ஞான விகாஸினி ஷாஸ்த்ரனுதே
பவபய ஹாரிணி பாப விமோசனி
சாது ஜனாஷ்ரித பாதயுதே
ஜெயஜெய ஹே மதுசூதன காமினி
தைர்யலக்ஷ்மி சதா பாலயமாம்

ஜெயஜெய துர்கதி நாஷினி காமினி
ஸர்வ ஃபலப்ரத ஷாஸ்த்ரமயே
ரதகஜ துரகபதாதி ஸமாவ்ருத
பரிஜன மண்டித லோகனுதே
ஹரிஹர ப்ரஹ்ம ஸுபூஜித சேவித
தாப நிவாரிணி பாதயுதே
ஜெயஜெய ஹே மதுசூதன காமினி
கஜலக்ஷ்மி ரூபேண பாலயமாம்

அயி ககவாஹினி மோஹினி சக்ரிணி
ராகவி வர்தினி ஞானமயே
குணகண வாரிதி லோக ஹிதைஷிணி
ஸ்வரஸப்த பூஷித கானனுதே
சகல சுராசுர தேவ முனீஷ்வர
மானவ வந்தித பாதயுதே
ஜெயஜெய ஹே மதுசூதன காமினி
சந்தானலக்ஷ்மி த்வம் பாலயமாம்

ஜெய கமலாசனி ஸத்கதி தாயினி
ஞான விகாஸினி கானமயே
அனுதின மர்ச்சித குங்கும தூசர
பூஷித வாஸித வாத்யனுதே
கனகதா ராஸ்துதி வைபவ வந்தித
ஷங்கர தேசிக மான்யபதே
ஜெயஜெய ஹே மதுசூதன காமினி
விஜயலக்ஷ்மி சதா பாலயமாம்

ப்ரணத ஸுரேஷ்வரி பாரதி பார்கவி
சோக விநாஷினி ரத்னமயே
மணிமய பூஷித கர்ண விபூஷண
ஷாந்திஸமாவ்ருத ஹாஸ்யமுகே
நவநிதி தாயினி கலிமல ஹாரிணி
காமித ஃபலப்ரத ஹஸ்தயுதே
ஜெயஜெய ஹே மதுசூதன காமினி
வித்யாலக்ஷ்மி சதா பாலயமாம்

திமிதிமி திந்திமி திந்திமி திந்திமி
துந்துபி நாத ஸுபூர்ணமயே
குமகும கும்கும கும்கும கும்கும
ஷங்கநி நாதஸு வாத்யனுதே
வேத புராண திஹாச ஸுபூஜித
வைதிக மார்க ப்ரதர்ஷயுதே
ஜெயஜெய ஹே மதுசூதன காமினி
தனலக்ஷ்மி ரூபேண பாலயமாம்


அன்புடன்
கவிநயா

Monday, March 14, 2011

பக்திக்குள்ள நீயிருக்கே!


பாலுக்குள்ள நெய்யிருக்கு
பருத்திக்குள்ள துணியிருக்கு
வித்துக்குள்ள மரமிருக்கு அம்மா செல்லம்மா – எம்
பக்திக்குள்ள நீயிருக்கே அம்மா சொல்லம்மா

சிக்கிமுக்கிக் கல்லுக்குள்ள
சிக்கிக்கிட்ட தீயப்போல
சித்தத்துல சிக்கியிருக்கே அம்மா செல்லம்மா – அந்த
பித்துலநாம் பாடுறனே அம்மா சொல்லம்மா

ஊனுசுரு மறைஞ்சாலும்
ஒன்நெனப்பு மறையாது
மண்ணோடும் வேரப்போல அம்மா செல்லம்மா – நீ
உள்ளோடி இருக்குறியே அம்மா சொல்லம்மா!


--கவிநயா

சுப்பு தாத்தா பிருந்தாவன சாரங்கா ராகத்தின் சாயலில், நாட்டுப்புறப் பாடலாக பாடியிருக்கிறார். மிக்க நன்றி தாத்தா!

Monday, March 7, 2011

உன்மீது பித்தான அன்பொன்றே வேண்டும்!சுப்பு தாத்தாவின் குரலில், இசையில்... மிக்க நன்றி தாத்தா!

ஆய்ந்தாய்ந்து பார்க்கின்ற அறிவெனக்கு வேண்டாம்!
ஞாலமெலாம் புகழ்கின்ற ஞானமும் வேண்டாம்!
ஆண்டாண்டு காலமாய் புவியாளும் தேவீ!
உன்மீது பித்தான அன்பொன்றே வேண்டும்!

உன்அன்பின் மதுவுண்டு நான்களிக்க வேண்டும்!
அம்மதுவின் போதையிலே எனைமறக்க வேண்டும்!
பக்தர்களின் இதயங்களைக் கொள்ளைகொள்ளும் காளீ!
உனதன்புக் கடலினிலே எனைமூழ்க வைநீ!

சுழல்கின்ற புவியோடு உணர்வுபல சுழலும்;
உலகெல்லாம் உன்னுடைய மாயைதனில் உழலும்!
சிரிப்போரும் அழுவோரும் மகிழ்வோரும் உண்டு;
சிறிதும்உன்னை நினையாது மரிப்போரும் உண்டு!

யேசுவும், மோசஸும், புத்தர், கௌரங்காவும்
உன்னன்பின் மதுவருந்தி போதையிலே திளைத்தார்;
நானும் அந்நிலையடைந்து அவரோடு களிக்கும்
நாளெந்த நாளோ? நீசொல்வாய் அம்மா!

--கவிநயா

('Gospel of Sri Ramakrishna' புத்தகத்திலிருந்து 'make me mad with thy love' என்ற பாடலை தழுவி எழுதியது)