Tuesday, October 7, 2008

மாணிக்க வீணையேந்தும் கலைவாணிக்கு என்னென்ன பெயர்கள்?

சரஸ்வதி-ன்னா என்னாங்க பொருள்? ஏன் அவள் கல்விக் கடவுள்? தேவி நவராத்திரி-ன்னு பொதுவாச் சொன்னாலும், பார்வதி பூஜை, இலக்குமி பூஜை என்றெல்லாம் சொல்லாது, அது என்ன இவளுக்கு மட்டும் தனியாகச் சரஸ்வதி பூஜை?

அதற்கு முன்பு, அனைத்து அன்பர்களுக்கும் இனிய சரஸ்வதி பூசை, விஜயதசமி, நவராத்திரி வாழ்த்துக்கள்.
சுசீல்லாம்மா குரலே ஒரு மோகன ராகம். அவங்களே மோகன ராகத்தில் பாடினால்? அந்தப் பாட்டில் இருந்து தொடங்குவோம்.

மாணிக்க வீணையேந்தும் மாதேவி கலைவாணி அருமையான வீணை இசைப்பாடல்! கலைமாமணி K.சோமு எழுதி, இசையமைத்து, சுசீலாம்மா பாடியது!
அருள்வாய் நீ, இசை தர வா நீ, வா நீ, வாணீ, கலை வாணி என்று நல்ல சொற்கள் அருவி போல் வந்து விழும் சுகம்.
இதோ கேட்டு மகிழுங்கள்!மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி
தேன் தமிழ் சொல் எடுத்துப் பாட வந்தோம்
அம்மா பாட வந்தோம்


அருள்வாய் நீ
இசை தர வா நீ
இங்கு வருவாய் நீ
லயம் தரும் வேணி - அம்மா
(மாணிக்க)

நா மணக்கப் பாடி நின்றால் ஞானம் வளர்ப்பாய்
பூ மணக்க பூஜை செய்தால் பூவை நீ மகிழ்வாய்

(மாணிக்க)

வெள்ளைத் தாமரையில் வீற்றிருப்பாய் - எங்கள்
உள்ளக் கோவிலிலே உறைந்து நிற்பாய்
கள்ளம் இல்லாமல் தொழும் அன்பருக்கே - என்றும்
அள்ளி அருளைத் தரும் அன்னையும் நீயே

வாணி சரஸ்வதி மாதவி பார்கவி
வாகதீஸ்வரி மாலினி
காணும் பொருள்களில் தோன்றும் கலைமணி
வேண்டும் வரம் தரும் வேணி நீ
நான்முக நாயகி மோஹன ரூபிணி
நான்மறை போற்றும் தேவி நீ
வானவர்க்கு இனிதே தேனருள் சிந்தும்
கான மனோஹரி கல்யாணி


அருள்வாய் நீ
இசை தர வா நீ
இங்கு வருவாய் நீ
லயம் தரும் வேணி - அம்மா
(மாணிக்க)

வீணை இசையில் மாணிக்க வீணை:


மாணிக்க வீணையேந்தும் கலைவாணிக்கு என்னென்ன பெயர்கள் எல்லாம் வழங்கப்படுகின்றன? பின்னூட்டத்தில் சொல்லுங்க பார்ப்போம்! :)

13 comments:

 1. லோக மாதா (பிரம்மனுக்கு துணையாயிற்றே) சரஸ்வதிக்கு வந்தனம் !

  :)

  ReplyDelete
 2. //மாணிக்க வீணையேந்தும் கலைவாணிக்கு என்னென்ன பெயர்கள் எல்லாம் வழங்கப்படுகின்றன? //

  மஹாபத்ரா
  மஹாமாயா
  வரப்ரதா
  பத்மநிலயா
  சிவானுஜா
  புஸ்தகஹஸ்தா
  ஞானமுத்ரா
  ரமா
  காமரூபா
  மஹாவித்யா
  மஹாபாதகநாசினி

  வேண்டுமெனில் இன்னும் வரும். :-)

  ReplyDelete
 3. கோவி அண்ணா
  சரஸ்-வதி என்ற சொல்லுக்குப் பொருள் என்னாங்கண்ணா?

  சென்னையில் இருக்கேன்; அடுத்த வாரம் வந்து கச்சேரியைத் துவங்கிடறேன்!
  அது வரை அன்பர்களே ஆடி ஓடி விளையாடவும்! :)

  ReplyDelete
 4. குமரன்
  தமிழ்ப் பெயர்களும் அதே வரிசையில் சொல்ல வேண்டும் :)

  மெளலி அண்ணா வந்து அன்னையின் ஆயிரம் நாமங்கள் சாற்றுவார்!

  ReplyDelete
 5. //சிவானுஜா//

  சிவனுக்கு அனுஜையா சரஸ்வதி? விளக்குங்குள் குமரன்!

  ReplyDelete
 6. //kannabiran, RAVI SHANKAR (KRS) said...
  கோவி அண்ணா
  சரஸ்-வதி என்ற சொல்லுக்குப் பொருள் என்னாங்கண்ணா?

  சென்னையில் இருக்கேன்; அடுத்த வாரம் வந்து கச்சேரியைத் துவங்கிடறேன்!
  அது வரை அன்பர்களே ஆடி ஓடி விளையாடவும்! :)
  //

  முதல் பின்னூட்டத்தில் நான் எதும் தப்பாகச் சொன்னேனா ? பிரம்மா உலகநாயகன் (கமல் இல்லைங்கோ, கமலத்தில் இருப்பவர்) என்றால் சரஸ்வதி உலகமாதா தானே !

  ReplyDelete
 7. இனிய பாடல்.
  ஸரஸ் என்றால் கலை எனப் பொருள்
  ஸரஸ்வதி= கலைகளின் இருப்பிடம். கலைமகள்.

  அனுஜா என்றால் பின் பிறந்தவர்; தம்பி அல்லது தங்கை.
  சிவனின் தங்கை சிவானுஜா

  ReplyDelete
 8. //முதல் பின்னூட்டத்தில் நான் எதும் தப்பாகச் சொன்னேனா ?//

  ஆகா...
  நான் உங்களிடம் மெய்யாலுமே சரஸ்-வதி விளக்கம் தான் கேட்டேன் கோவி அண்ணா! நீங்க தான் வட மொழியும் கரைத்துக் குடிப்பவர் ஆச்சே! :)

  பரவாயில்லை. SK ஐயா சொல்லி விட்டார். நீங்க சொன்னாலும் அவர் சொன்னாலும் ஒன்னு தான்.

  //பிரம்மா உலகநாயகன் (கமல் இல்லைங்கோ, கமலத்தில் இருப்பவர்) என்றால் சரஸ்வதி உலகமாதா தானே !//

  அதிலென்ன ஐயம்?
  உலக நலனை நினைப்பவள் உலகன்னை தான்!

  ReplyDelete
 9. //ஸரஸ்வதி= கலைகளின் இருப்பிடம்.//

  நன்றி SK.
  சரஸ் என்பதற்கு நீர்த்தடம், தாமரை (சரஸிஜாஷி), குணநலம் என்றும் பொருள் அல்லவா?

  //அனுஜா என்றால் பின் பிறந்தவர்; தம்பி அல்லது தங்கை.
  சிவனின் தங்கை சிவானுஜா//

  இராமனின் அனுஜன் இராமானுஜன்.
  கந்தனின் பூர்வஜன் ஸ்கந்த பூர்வஜன்-கணேசன்.

  சரஸ்வதி, சிவனாரின் தங்கை ஆன கதையை சுருக்கமாகச் சொல்லுங்களேன் SK!

  ReplyDelete
 10. இந்தியால இருந்து கச்சேரியா :) சரஸ்வதி பூஜை, விஜயதசமி வாழ்த்துகள் கண்ணா. நல்ல பாடலுக்கு நன்றி.

  ReplyDelete
 11. Trigunamayee Mahalakshmi
  Mahakali Mahalakshmi Mahasarasvati
  (tamas) (rajas) (sattvas)
  Siva Sarasvati Brahma Lakshmi Vishnu Parvati

  According to T.A. Gopinath Rao,16 the
  three forms of Mahalakshmi, Mahakali, and
  Mahasarasvati divided their bodies into two
  halves, i.e., one male and the other female.
  Accordingly, Mahalakshmi created Brahma and
  Lakshmi, Mahakali created Siva and Sarasvati,
  and Mahasarasvati produced Vishnu and
  Parvati. All came into action forming their
  union with their male counterparts. Sarasvati
  married to Brahma, Laksmi married to Vishnu
  and Parvati married to Siva and they were
  engaged for creation of the universe,
  preservation of the universe, and

  ReplyDelete
 12. //According to T.A. Gopinath Rao,16 the
  three forms of Mahalakshmi, Mahakali, and
  Mahasarasvati divided their bodies into two
  halves, i.e., one male and the other female.
  Accordingly, Mahalakshmi created Brahma and
  Lakshmi, Mahakali created Siva and Sarasvati,
  and Mahasarasvati produced Vishnu and
  Parvati. All came into action forming their
  union with their male counterparts. Sarasvati
  married to Brahma, Laksmi married to Vishnu
  and Parvati married to Siva and they were
  engaged for creation of the universe,
  preservation of the universe, and
  //

  பாலச்சந்தரின் புரியாத புதிருகான வேர் கதை இதுதானா ?

  ReplyDelete
 13. Bharathi
  Vagishwari
  vakdevi
  malini
  saavithri
  Gayathri
  Bhramini
  Naamagal
  Navok karasi
  Peachiyamman
  Sakala kala valli
  Kalai vani
  Saraswathi

  ReplyDelete