Friday, January 22, 2010

நீயே கதி! நீயே கதி! நீ மட்டுமே கதி பவானி!ந தாதோ ந மாதா ந பந்துர் ந தாதா
ந புத்ரோ ந புத்ரீ ந ப்ருத்யோ ந பர்தா
ந ஜாயா ந வித்யா ந வ்ருத்திர் மமைவ
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானி!


எனக்கு என் தந்தையோ தாயோ உறவினர்களோ நண்பர்களோ மகன்களோ மகள்களோ பணியாட்களோ கணவனோ மனைவியோ கல்வியோ தொழிலோ எதுவுமே அடைக்கலம்/கதி இல்லை. நீயே கதி! நீயே கதி! நீ மட்டுமே பவானி!

பவாப்தாவபாரே மஹா துக்க பீரு
பபாத ப்ரகாமீ ப்ரலோபீ ப்ரமத்த:
குஸம்ஸார பாஸ ப்ரபத்த: சதாஹம்
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானி!

பெரும் துன்பத்தைத் தரும் இந்த பிறப்பிறப்புக் கடலில் நான் இருக்கிறேன். இத்துன்பத்தைக் கண்டு பெரும் பயம் கொள்கிறேன். பாவத்தாலும் காமத்தாலும் கஞ்சத்தனத்தாலும் ஆசையாலும் எப்போதும் பீடிக்கப்பட்டு பிறப்பிறப்புக் கட்டினால் கட்டப்பட்டு பயனில்லா வாழ்கை வாழ்கிறேன். நீயே கதி! நீயே கதி! நீ மட்டுமே பவானி!

ந ஜானாமி தானம் ந ச த்யானயோகம்
ந ஜானாமி தந்த்ரம் ந ச ஸ்தோத்ரமந்த்ரம்
ந ஜானாமி பூஜாம் ந ச ந்யாஸயோகம்
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானி!

தானம் தருவதை அறியேன்; தியான யோகம் அறியேன்; துதிகள் மந்திரங்கள் தந்திரங்கள் அறியேன்; பூஜை செய்யும் முறைகளும் அறியேன்; அனைத்தையும் துறக்கும் யோகமும் அறியேன். நீயே கதி! நீயே கதி! நீ மட்டுமே பவானி!ந ஜானாமி புண்யம் ந ஜானாமி தீர்த்தம்
ந ஜானாமி முக்திம் லயம் வா கதாசித்
ந ஜானாமி பக்திம் வ்ருதம் வாபி மாத
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் தவமேகா பவானி!

புண்ணியச் செயல்களை அறியேன்; புண்ணியத் தலங்களை அறியேன்; முக்தி வழிகளை அறியேன்; இறையுடன் மனத்தைக் கலக்கும் வழி அறியேன்; பக்தியும் அறியேன்; விரதங்களையும் அறியேன். தாயே! நீயே கதி! நீயே கதி! நீ மட்டுமே பவானி!

குகர்மீ குசங்கீ குபுத்தி குதாச:
குலாசாரஹீன: கதாசாரலீன:
குத்ருஷ்டி: குவாக்ய ப்ரபந்த: சதாஹம்
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானி!

நான் தீய செயல்களைச் செய்பவன்; தீய உறவுகளை உடையவன்; தீய எண்ணங்களை உடையவன்; தீயவர்களிடம் பணி செய்பவன்; நன்னடத்தை இல்லாதவன்; தீய நடத்தை உடையவன்; தீய பார்வை கொண்டவன்; தீய சொற்களின் குவியல்களைக் கொண்டவன்; எப்போதும்! நீயே கதி! நீயே கதி! நீ மட்டுமே பவானி!

ப்ரஜேஷம் ரமேஷம் மஹேஷம் சுரேஷம்
தினேஷம் நிசிதேஸ்வரம் வா கதாசித்
ந ஜானாமி சான்யத் சதாஹம் சரண்யே
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானி!

மக்களின் தலைவனையோ, மகாலக்ஷ்மி தலைவனையோ, மகேசனையோ, தேவர் தலைவனையோ, நாளின் தலைவனையோ, இரவின் தலைவனையோ மற்ற எந்தத் தலைவனையும் நான் அறியேன்! எப்போதும்! கதியானவளே! நீயே கதி! நீயே கதி! நீ மட்டுமே பவானி!விவாதே விஷாதே ப்ரமாதே ப்ரவாசே
ஜலே ச அனலே பர்வதே சத்ரு மத்யே
அரண்யே சரண்யே சதா மாம் ப்ரபாஹி
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானி!

விவாதங்களிலும், கவலையிலும், விபத்துகளிலும், தூர தேசங்களிலும், நீரிலும், நெருப்பிலும், மலையிலும், எதிரிகள் நடுவிலும், காட்டிலும், கதியானவளே, எப்போதும் என்னை நன்கு காத்தருள்வாய்! நீயே கதி! நீயே கதி! நீ மட்டுமே பவானி!

அநாதோ தரித்ரோ ஜரா ரோக யுக்தோ
மஹா க்ஷீண தீன: சதா ஜாட்யவக்த்ர:
விபத்தௌ ப்ரவிஷ்ட: ப்ரணஷ்ட: சதாஹம்
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானி!

நான் அனாதை! நான் ஏழை! முதுமையும் நோயும் கொண்டவன்! நான் மிகவும் களைத்தவன்! நான் மிகவும் வருந்தத்தகுந்தவன்! எப்போதும் பிரச்சனைகளால் விழுங்கப்படுபவன்! எப்போதும் விபத்துகளால் நஷ்டமடைபவன்! நீயே கதி! நீயே கதி! நீ மட்டுமே கதி பவானி!
14 comments:

 1. அப்படியே என் மனசை சொல்ற மாதிரி இருக்கு. படிச்சேன், இன்னும் கேட்கலை, மறுபடி வரேன்.

  ReplyDelete
 2. குமரன், சொன்னால் நம்புவீர்களா? நீங்கள் தான் இந்த பதிவை இட்டீர்கள் என்று முழு பதிவையும் படிக்கும் முன்னரே யூகித்தேன்.:)
  சென்னை காளிகாம்பாள் கோயிலுக்கு சிவாஜி விஜயம் செய்து, அம்பாள் அருளை பெற்றதாக சொல்வர்.படம் அருமை. ஸ்லோகங்கள் நீங்கள் எழுதியவையா? அம்பாள்கிட்ட ஒண்ணுமே தெரியாதுன்னு சொல்லிட்டு கிருஷ்ணன்கிட்ட கொஞ்சம் ஏதோ தெரியும் (சிறிய ஞானத்தன்) அப்படின்னு பொய் சொல்றீங்களா ? :)

  ReplyDelete
 3. Million thanks - நொசுர் வெங்கட்ராமன் இன் உபன்யாசங்கள் கேட்டிருக்கிறீர்களா - முக்கியமாக அவரின் உள்ளது நாற்பது (ரமண மகரிஷியின் )

  http://www.mediafire.com/sathya1709#

  ReplyDelete
 4. சூப்பர் சுப்ரா இந்தப் பாடலைப் பற்றி டிசம்பர் 2008ல் ஒரு பின்னூட்டத்தில் சொன்னார். அப்போது உடனே பார்க்கவில்லை. குறித்து வைத்துக் கொண்டேன். இப்போது தான் இட முடிந்தது.

  எழுதும் போது உங்களைத் தான் நினைத்துக் கொண்டேன் கவிநயா அக்கா. ஒவ்வொரு வரியும் உங்கள் நினைவைத் தான் கொண்டு வந்தது.

  பாட்டைக் கேட்டீர்களா?

  ReplyDelete
 5. என்ன இராதா கிண்டலா? சுலோகங்கள் எழுதுற அளவுக்கெல்லாம் சமஸ்கிருதம் தெரியாதுங்க. இது சங்கராசாரியர் எழுதுனது.

  கொஞ்சம் ஏதோ தெரியும்ன்னு எல்லாம் சொல்லலை. சாப்புட ஊட்டி விட்டா சாப்புடத் தெரியும்; அம்புட்டு தான் - அது தான் 'சிறிய ஞானம்'. அதனால அங்கேயும் இங்கேயும் ஒரே கதை தான். இங்கேயும் பொய் இல்லை; அங்கேயும் பொய் இல்லை. :-)

  ReplyDelete
 6. இந்த அழகிய துதியை எனக்கு அறிமுகப்படுத்தியதற்கு நன்றி சூப்பர் சுப்ரா. நீங்கள் சொல்லும் உபந்யாசங்களைக் கேட்டதில்லை. கேட்கிறேன். நன்றி.

  ReplyDelete
 7. நான் முன்பு இதை பதிவிட நினைத்ததுண்டு..நன்றி குமரன்.

  ReplyDelete
 8. இப்போதும் நீங்கள் இடலாம் மௌலி. இன்னும் ஆழமான புரிதல்கள் உங்களுக்கு இருக்கும்.

  ReplyDelete
 9. நன்றி சதீஷ்குமார்.

  ReplyDelete
 10. இப் பாடல் கந்தர் சஷ்டி விழாவில்
  (திருநெல்வேலி ஸ்ரீமுத்து கிருஷ்ண குழு )
  இப்பாடலை நிறைவு பாடல் அக பாடுவார்கள்.
  மனம் உருகி விடும்
  ..அதுவும் கடைசி வரி யை நான்கு முறை சிறி து சிறி தாக
  உயர்திபாடி ஐந்தாம் முறை இறைக்கி பாடினால்
  பவானி மாதா பறந்து ஒடி வருவாள் ....
  ..நன்றி குமரன் ...
  .சித்ரம்..//

  ReplyDelete
 11. மிக்க நன்றி குமரன். இன்று தான் உங்கள் இந்த பதிவை பார்த்தேன் (11.11.10)

  ReplyDelete
 12. நன்றி சூப்பர்சுப்ரா.

  ReplyDelete