Monday, March 8, 2010

வாணீ நீ வா நீ

சித்ரா என்பவர் எழுதி அனுப்பிய பாடல்...




வாணீ நீ வா நீ

வா வா என்று உனை நான் அழைப்பேன் .
.வரும் வழி விழி வைத்து காத்து இருப்பேன்...
.வாடிய பயிராய் நான் தவிப்பேன் ..
வஞ்சம் இல்லாதொரு வழி வகுப்பாய் ..

பண்ணெடு பாடிடும் வண்டிணமே .
.பை யங் கிளியே சென்று நீ ஒதாய் ...
.நின்னொடு நான் கொண்ட பக்தி யினை ..
நிலை தவறாமல் நீ கூவிடுவாய் ...

. மகரந்த வாசனை உ ன் மேலும்
மரகத மாமணி உமையாளும் .
.மகிழ மனம் போல் பாத மலர் தூவி .
.மங்கை நீ பொங்க நலம் அருள் வாய் ..

. வாணீ நீ வரம் தர நீ வருவாய் .
..மணியாரம் சூட்டி மகிழ் ந்திருப்பாய் .
.மாணிக்க கரும்பின் விழி பாவாய் ..
மாட்சி எல்லாம் தந்து எமை காப்பாய் ..

சித்ரம் ..

8 comments:

  1. வாணீ நீ வா நீ

    வா வா என்று உனை நான் அழைப்பேன்::))))

    உங்களுக்கு கற்பனை வளம் நறைய இருக்குங்க!

    வாணீ என்ற வார்த்தை படித்தவுடன்
    ஒரு சினிமா பாடல் ஞாபகம் வருகிறது.
    அப்படியே அம்மா மீது.....



    வான் நிலா நிலா அல்ல –அம்மா உன் கண் நிலா
    தேன் நிலா எனும் நிலா - என் தேவியின் நிலா
    அம்மா நீயில்லாத நாளெல்லாம் - நான் தேய்ந்த வெண்ணிலா

    ReplyDelete
  2. சித்ரா என்பது உங்கள் தங்கையா ? தோழியா ?
    பாடல் நன்றாக இருக்கிறது.
    பெளளி ராகத்தில் பாட முயற்சித்தேன்.
    சுப்பு ரத்தினம்.
    http://menakasury.blogspot.com

    ReplyDelete
  3. வாங்க ராஜேஷ். இந்த பாடல் சித்ராங்கிறவங்க எழுதினது. அவங்களும் வந்து பதில் சொல்வாங்கன்னு நினைக்கிறேன் :)

    ReplyDelete
  4. வாங்க தாத்தா. 'ராமச்சந்திரன்'கிற பெயரில் என் இடுகைகளில் எப்பவாவது பின்னூட்டுவாங்க. அப்படித்தான் தெரியும்.

    பௌளி ராகத்தில் இனிமையாக இருக்கிறது. நன்றி தாத்தா.

    ReplyDelete
  5. .மாணிக்க கரும்பின் விழி பாவாய் ..
    மாட்சி எல்லாம் தந்து எமை காப்பாய்

    எளிமையா அழகா இருக்கு பாடல்

    ReplyDelete
  6. நானும் இப் பாடலை எனக்கு தெரிந்த ராகத்தில் பாடி கொண்டிருப்பேன் . பெளளி ராகத்தில்
    அதிக பரிட்சய பாடல் ஒன்றுசொல்லவும்
    ..ரசித்து வாசித்த உங்களுடன் எனக் கும் ......
    .. வாணியின் ஆசி ...சித்ரம்..

    ReplyDelete
  7. my grandkid sings in raag bowli
    most popular song: Sriraman narayana
    http://www.youtube.com/watch?v=QPl61e1M_ms
    Same song by :
    sudha regunathan
    http://www.youtube.com/watch?v=aTbQOmIYIY4
    one Very good song in Raag Bowli by an youngster
    karuna nidhiye thaye
    http://www.youtube.com/watch?v=f8Cce8uVcHE

    meenatchi paatti

    ReplyDelete
  8. பண்ணெடு பாடிடும் வண்டிணமே .
    .பை யங் கிளியே சென்று நீ ஒதாய் ...
    .நின்னொடு நான் கொண்ட பக்தி யினை ..
    நிலை தவறாமல் நீ கூவிடுவாய்

    ஆஹா நல்ல தூது. நிச்சியமாய் வாணியைச் சேர்ந்திருக்கும். பௌளி ராகதில் எம் ஸ் அம்மா பாடிய சம்போ மஹாதேவ சரணம் ச்ரி காளாதீச பாடல் கேட்டுப் பாருங்க

    www.musicindiaonline.com

    ReplyDelete