Monday, February 21, 2011

உன்னை நினைந்து...


உன்னை நினைந்து உருகும் உள்ளத்தில்
குடியிருப்பாய் அம்மா
தன்னை மறந்து தாய் உன்னைப் பாடிட
அருள் புரிவாய் அம்மா

மின்னற் கொடிபோல் வடிவழகுடைய
அன்னைஉன் பெருமைகளை
கன்னல் மொழியாம் தமிழினில் பாட
அருளிடுவாய் அம்மா

உலகத்தை எல்லாம் உண்டாக்கி அதில்
நீயும் உறைந்தாயே
உழலும் உயிர்களை உய்வித்திடவே
கருணை வைத்தாயே

என்சிற் றறிவுக்கு சிறிதும் எட்டாத
பரம்பொருளே உமையே
சிற்றெறும்பானாலும் அருள் தருவாய் உன்
கருணைக் கிணைஇலையே

விதிக்கிடைப் பட்டு வலிபல பெற்று
வாடுகின்றேன் அம்மா
உன்விழிக்கடைப் பார்வை என்மேல் பட்டால்
வாழ்ந்திடுவேன் அம்மா

ஆயிரம் கண்களில் கருணைக் கடலை
ஏந்தி நிற்கும் அம்மா
அந்தக்கருணையில் ஒருதுளி என்திசை தெறித்திட
ஏங்குகிறேன் அம்மா

உன்திருவடியில் ஒருதுகளாய் நான்
கிடந்திட வேண்டும் அம்மா
உன்மலரடிகளை மறவா மல்நான்
இருந்திட வேண்டும் அம்மா


--கவிநயா

15 comments:

  1. kavinaya kuralkettu kanthimathiyum
    kangal thiranthuvittal!
    karunaimazhaiyil nammaikkulippaatta
    kathavum thiranthuvittal!

    ReplyDelete
  2. அருமையானகவிதை .. நிறைவான பதிவு நண்பரே..
    வாழ்த்துக்கள்....

    http://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post_22.html

    வந்து எதாவது சொல்லுங்க..

    ReplyDelete
  3. ஓட்டும் போட்டுட்டோம்ல்ல...

    ReplyDelete
  4. ஒரே ஒரு முறை...கல்லூரி படிப்பை முடித்தக் கையுடன், மிக அருமையான நண்பர்களுடன் நெல்லையப்பர் கோவிலுக்கு சென்ற அனுபவம் இன்னும் பசுமையாக நினைவில் இருக்கிறது. அன்று பிரதோஷம் என்று நினைக்கிறேன்...
    கோயில் நடை சாத்தும் நேரம்...அம்பாள் சந்நிதியில் இருபுறமும் பக்தர்கள் வரிசையாக நின்று கொண்டு,
    "கண்டேன் அவள் திருப்பாதம் !
    கண்டறியாதன கண்டேன் !!"
    என்ற ஒருமித்தக் குரலில் பாடியது (மேலே உள்ள இரு வரிகளை வெவ்வேறு ராகங்களில்) இன்றும் காதில் ஒலிக்கிறது.
    மிக்க நன்றி அக்கா. :-)

    ReplyDelete
  5. அழகான அர்ப்பணிப்பு அக்கா :)

    ReplyDelete
  6. //ஆயிரம் கண்களில் கருணைக் கடலை
    ஏந்தி நிற்கும் அம்மா
    அந்தக்கருணையில் ஒருதுளி என்திசை தெறித்திட
    ஏங்குகிறேன் அம்மா//
    மிகவும் ரசித்த வரிகள் :)

    ReplyDelete
  7. /விதிக்கிடைப் பட்டு வலிபல பெற்று
    வாடுகின்றேன் அம்மா
    உன்விழிக்கடைப் பார்வை என்மேல் பட்டால்
    வாழ்ந்திடுவேன் அம்மா

    ஆயிரம் கண்களில் கருணைக் கடலை
    ஏந்தி நிற்கும் அம்மா
    அந்தக்கருணையில் ஒருதுளி என்திசை தெறித்திட
    ஏங்குகிறேன் அம்மா/

    அருமை

    ReplyDelete
  8. 2007 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நெல்லை சென்றிருந்தேன். இந்தப் படமும் பாட்டும் மீண்டும் நெல்லை போக வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டுகின்றன.

    ReplyDelete
  9. //kavinaya kuralkettu kanthimathiyum
    kangal thiranthuvittal!
    karunaimazhaiyil nammaikkulippaatta
    kathavum thiranthuvittal!//

    மிக்க மகிழ்ச்சி லலிதாம்மா :) அதுக்குத்தானே வெயிட்டிங்...

    ReplyDelete
  10. //வந்து எதாவது சொல்லுங்க..//

    வருகைக்கு நன்றிங்க கருன். விரைவில் வருகிறேன்...

    ஓட்டு போட்டதுக்கும் மிக்க நன்றி :)

    ReplyDelete
  11. //"கண்டேன் அவள் திருப்பாதம் !
    கண்டறியாதன கண்டேன் !!"
    என்ற ஒருமித்தக் குரலில் பாடியது (மேலே உள்ள இரு வரிகளை வெவ்வேறு ராகங்களில்)//

    ஆஹா, நண்பர்கள்னா இப்டில்ல இருக்கணும்? :) நன்றி ராதா.

    ReplyDelete
  12. //அழகான அர்ப்பணிப்பு அக்கா :)//

    நன்றி சங்கர் :)

    ReplyDelete
  13. //அருமை//

    ரசித்தமைக்கு நன்றி திகழ்!

    உங்களுடைய வெண்பா வனத்தில் வெண்பாக்கள் மிக அழகாக பூத்துக் குலுங்குகின்றன. பின்னூட்ட இயலாததால், இங்கே சொல்லத் தோன்றியது. அருமையாக எழுதுகிறீர்கள், திகழ்.

    ReplyDelete
  14. //2007 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நெல்லை சென்றிருந்தேன். இந்தப் படமும் பாட்டும் மீண்டும் நெல்லை போக வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டுகின்றன.//

    போயிட்டு வந்துடுங்க, எனக்கும் சேர்த்து... நான் போனதே இல்லை... இனியும் எப்ப சந்தர்ப்பம் வாய்க்கும்னு தெரியலை :(

    வருகைக்கு நன்றி கோபி.

    ReplyDelete
  15. //ஆஹா, நண்பர்கள்னா இப்டில்ல இருக்கணும்? :) //
    பாடியது அந்த ஊர் பக்தர்கள் அக்கா. :-)
    நாங்க நல்ல சந்தோஷமா ரசிச்சிட்டு வந்தோம். :-)
    இருந்தாலும் எனது அந்த நண்பர்கள் பத்தரை மாற்று தங்கங்கள் தான். தற்பொழுது அருகில் இல்லை. :-((( உங்க ஊர்ல (u.s) தான் குப்பை கொட்டிட்டு இருக்காங்க. :-)

    ReplyDelete