Thursday, February 24, 2011

தாயே, உன் பையன்...


ஆற்று வெள்ளம், நாளை வரத்
தோற்றுதே குறி - அம்மா
கண்ணில் வெள்ளம், நித்தம் வரக்
குறி சொல்வாயோ?

தாயி என்று, கால் பிடித்துக்
கெஞ்சும் பிள்ளையை - இன்று
நோக வைத்து, நொங்க வைத்து
நடம் புரிவாயோ?
--------------------------------------

பிறந்த வீட்டில், பட்டாம் பூச்சி
போலப் பறந்தேன் - என்னைப்
பிடித்து வந்துன், பிள்ளை வீட்டில்
வளர்த்த ஈஸ்வரி...

குன்றில் உந்தன் பிள்ளை யவன்
கோவித்துக் கொண்டால் - மனம்
கொஞ்சமும் இரங்கான் இதைச்
சொல்ல வில்லையே!
--------------------------------------

மக மாயி உன்னை நம்பி வந்த
பெண்ணைப் பாரடி!
குக தாயி எந்தன் கண் துடைக்க
கை வரல்லையோ?

அரங்க நகர் அப்பன் அங்குச்
சோறு ஊட்டுவான் - இங்கே
இரங்க யாரும் எனக்கில்லை
அஞ்சொல் நாயகீ!
------------------------------------

ஆதி மூலம், என்றே அன்று
ஆனை பிளிற - அப்பா
ஓடி வந்தார், அங்குச் சொல்ல
மனம் வரல்லையே!

ஏது பிழை செய்திடினும்
இந்த வீட்டிலே - அம்மா
பக்கத் துணை நீ ஒருத்தி
நீ ஒருத்தியே!
-------------------------------

ஆதி சக்தி வீட்டில் எந்தன்
நாதி கிடக்கும் - என்
மீதி உயிர் மீது அவன்
பார்வை பிறக்கும்!

கந்தன் மனக் கல் உருகும்
காலம் வரைக்கும் - உன்
தோளே கதி, தாளே கதி
தோகை மயிலே! - அம்மா....

தோளே கதி, தாளே கதி...
கற்பகாம்பிகே!!!

7 comments:

  1. "manam konjamum irangaan"?
    "kandan manakkal"?
    he is the one who not only rescued
    our arunagiri who was falling after committing sins,but also gifted him with "muththu"chorkal
    with which he could achieve the present status!
    as my 'shirdisayi'says,we've to
    show 'shradha'[total faith] and
    'saboori'[patience]

    ReplyDelete
  2. பாடல் மிகவும் துக்கமயம். :-(((
    அறிவுரை சொல்லவோ தெய்வம் எப்பொழுதும் நன்மை தான் செய்யும் என்று தெய்வத்தின் பக்கம் பேசவோ செய்யலாம்.
    ஆனால் சில நேரங்களில் சோதனைக்குட்பட்டவர் மட்டுமே உணர முடிவதை வெளியாளாக இருந்து கொண்டு புரிந்து கொள்ள முடியாது. விரைவில் துயர் தீர அம்பாள் பாதம் துணை செய்யட்டும்.

    ReplyDelete
  3. சங்கரன் துணைவி - ரவி
    சங்கரனுக்கு அருள் புரிவாய் !

    மயிலை கற்பகத்தின் பாதம்
    கயிலை நாயகியின் பாதம்

    ஆனைக்கா ஈஸ்வரி பாதம்
    ஆரூரான் மனையாள் பாதம்

    கோவிந்தன் தமையாள் பாதம்
    குருகுகன்தன் தாயார் பாதம்

    தில்லை சிவகாமி சுந்தரி
    நெல்லை காந்திமதியே !

    கஞ்சி காமாக்ஷி காசி விசாலாக்ஷி
    கூடல் மீனாக்ஷி வான்மியூர் சுந்தரியே

    திருக்கடை வாழ் அபிராமியே
    கடையேனுக்கும் உன் கடைக்கண்ணருள்
    கிடைக்க உனது பாதம் துணையே !

    ReplyDelete
  4. ராதா, வெகு அழகாக எழுதி இருக்கீங்க. அன்றைக்கே வாசிச்சிட்டாலும், என்ன எழுதறதுன்னு தெரியலை. நீங்கள் சொன்னது போல் துயரத்தின் நடுவில் இருப்பவருக்குத்தான் அதன் உண்மையான தீவிரம் தெரியும். அன்னை துணையிருப்பாள்.

    ReplyDelete
  5. அரங்க நகர் அப்பன் அங்குச்
    சோறு ஊட்டுவான் - இங்கே
    இரங்க யாரும் எனக்கில்லை
    அஞ்சொல் நாயகீ!
    ------------------------------------

    ஆதி மூலம், என்றே அன்று
    ஆனை பிளிற - அப்பா
    ஓடி வந்தார், அங்குச் சொல்ல
    மனம் வரல்லையே!

    ஏது பிழை செய்திடினும்
    எனக்கு இங்கே - அம்மா
    என்றும் துணை நீ ஒருத்தி
    நீ ஒருத்தியே!


    o my god: superb: !!!

    ReplyDelete
  6. No Editor here to welcome me :)
    @KRS: This song is such that i cannot possibly comment.
    there is really nothing i can say...
    ur poem drove me to tears...

    but, ur arangan is very concerned about u...
    he told me that...

    ReplyDelete