Monday, June 20, 2011

சின்னச் செவ்விதழில்...


சின்னச் செவ்விதழில்
சிறுநகை பூத்திருக்கும்

கருவிழியில் கருணைமழை
அருவியெனப் பொழிந்திருக்கும்

நெற்றித் திலகஒளி
நீள்நிலத்தை வழிநடத்தும்

கைவளைகள் கலகலத்து
காற்றினிலே ஒலிபரப்பும்

காதணியின் அசைவினிலே
கண்மலர்ந்து சொக்கிநிற்கும்

பொற்சிலம்புப் பாதங்கள்
பூஞ்சிறகாய் உயிர்அணைக்கும்!


--கவிநயா

4 comments:

  1. அகிலத்தையே
    அவள் ஆளும் பொழுது
    அவயங்கள் மட்டும்
    அருள் பொழியாமல்
    அடங்கி இருக்குமா?


    சின்ன வரியில்
    வண்ண கவிதை

    ReplyDelete
  2. நுதல் கண்டு நாணும் நிலா

    வளர்மதியாய் வளைந்துவிடும்!

    கரம் கண்டு வெட்கி மலர்

    தரை நோக்கிக் குனிந்து விடும்!

    ReplyDelete
  3. //அகிலத்தையே
    அவள் ஆளும் பொழுது
    அவயங்கள் மட்டும்
    அருள் பொழியாமல்
    அடங்கி இருக்குமா?//

    அழகா சொன்னீங்க திகழ்! நன்றி :)

    ReplyDelete
  4. //நுதல் கண்டு நாணும் நிலா

    வளர்மதியாய் வளைந்துவிடும்!

    கரம் கண்டு வெட்கி மலர்

    தரை நோக்கிக் குனிந்து விடும்!//

    உண்மைதான் லலிதாம்மா! நன்றி :)

    ReplyDelete