Monday, November 7, 2011

கடை விழியாலே காத்தருள்வாய்!



சுப்பு தாத்தா ஹிந்தோளம் ராகத்தில் மிகப் பொருத்தமாக அமைத்திருப்பதைக் கேட்டு மகிழுங்கள்! 
மிக்க நன்றி தாத்தா!

கடை விழியாலே காத்தருள்வாய்
கடலினை விஞ்சிடும் கருணை பொங்கும் உன்றன்
கடை விழியாலே காத்தருள்வாய்

சுடலைப் பொடி பூசும் சிவனுடனே
மடல் அவிழ்ந்த மலர் போல் மகிழ்பவளே
(கடை)

விடை தனிலே வருவாய் பதியுடனே
முடி தனிலே ஒளிரும் மதியுடனே
சடை முடியோ னுடன் அருளிடவே
மடை யென அன்பு வெள்ளம் பெருகிடவே
(கடை)


--கவிநயா

3 comments:

  1. //சுடலைப் பொடி பூசும் சிவனுடனே
    மடல் அவிழ்ந்த மலர் போல் மகிழ்பவளே//

    உன் பாதம் சரணடைந்தோம் அனைவரையும் காப்பாய் அம்மா.

    கற்பக வல்லியின் மஹேஸ்வரி கோலம் காண இங்கு வாருங்கள், நிச்சயம் தங்களுக்கு பிடிக்கும்.

    http://natarajar.blogspot.com/2011/11/10.html

    ReplyDelete
  2. கவிநயாவின் அழகான குட்டித்துதியை பொருத்தமான ராகத்தில் உருக்கமாகப்பாடிய சுப்புசாருக்கு நன்றி !

    ReplyDelete
  3. மிக்க நன்றி, கைலாஷி, மற்றும் லலிதாம்மா.

    //http://natarajar.blogspot.com/2011/11/10.html//

    கண்டிப்பாக வருகிறேன், விரைவில்... நன்றி.

    ReplyDelete