Monday, August 20, 2012

அஷ்டலக்ஷ்மி ஸ்தோத்திரம், தமிழில் - 4

ஜெயஜெய துர்கதி நாஷினி காமினி
ஸர்வ ஃபலப்ரத ஷாஸ்த்ரமயே
ரதகஜ துரகபதாதி ஸமாவ்ருத
பரிஜன மண்டித லோகனுதே
ஹரிஹர ப்ரஹ்ம ஸுபூஜித சேவித
தாப நிவாரிணி பாதயுதே
ஜெயஜெய ஹே மதுசூதன காமினி
கஜலக்ஷ்மி ரூபேண பாலயமாம்
.


துர்கதி மாற்றி அருள்பவளே
            திரு மாலவன் காதலில் கனிந்தவளே
கேட்டவை எல்லாம் கொடுப்பவளே
            நல்ல சாத்திரங்களின் வடிவானவளே
ரதகஜ துரக பதாதிகள் சூழ்ந்திட
            திகழ்ந்திடும் பாற்கடல் நாயகியே
அண்ட சராசர உயிர்கள் அனைத்துமே
            அன்புடன் பணிந்திடும் தேவதையே
அரியுடன் பிரம்மனும் அரனுடன் தேவரும்
            அடி பணிந்தேத்திடும் அன்னையளே
தாபங்கள் அனைத்தையும் நீக்கியே காத்திடும்
            தாமரைப் பாதங்கள் கொண்டவளே
மதுசூதனனின் காதலியே
என்றும் ஜய ஜய ஜய ஜய ஜய முனக்கே
 அன்புடன் உன்னடி பணிகின்றோம்
            எமை கஜ லக்ஷ்மியே காத்தருள்வாய்! 


--கவிநயா

படத்துக்கு நன்றி: http://www.astromandir.com/mahalakshmiyagya.html

13 comments:

 1. வாழ்த்துக்கள்...

  பதிவாக்கிப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...

  ReplyDelete
 2. உங்கள் பதிவுகள் சில படித்துக் கற்றுக்கொண்டதாக நான் நினைத்து எழுதிய திருவெழுக்கூற்றிருக்கை என் பாணியில் நீங்கள் படித்தால் மகிழ்வேன்.

  ReplyDelete
 3. உங்கள் பதிவுகள் சில படித்துக் கற்றுக்கொண்டதாக நான் நினைத்து எழுதிய திருவெழுக்கூற்றிருக்கை என் பாணியில் நீங்கள் படித்தால் மகிழ்வேன்.

  ReplyDelete
 4. மிக்க நன்றி, திரு.தனபாலன்!

  ReplyDelete
 5. //உங்கள் பதிவுகள் சில படித்துக் கற்றுக்கொண்டதாக நான் நினைத்து எழுதிய திருவெழுக்கூற்றிருக்கை என் பாணியில் நீங்கள் படித்தால் மகிழ்வேன்.//

  நீங்கள் சொன்ன பிறகுதான் உங்கள் பதிவைப் பார்த்து தெரிந்து கொண்டேன் ஐயா. நிறைய புதிய சொற்களும் கற்றுக் கொண்டேன். உங்கள் பெருந்தன்மையான வார்த்தைகளுக்கு , என்னுடைய பணிவன்பான வணக்கங்கள்.

  ReplyDelete

 6. VSK என்பவரின் பதிவில் தற்சமயம் எழுதியது ஏதும் காணாததால் அவரது வலைப் பூக்களில் ஒன்றான அம்மன் பாட்டுக்கு வந்ததால் உங்கள் அறிமுகம் கிடைத்தது. VSK அவர்கள் என் பதிவைப் பார்த்துக் கருத்து சொன்னால் மகிழ்வேன்.

  ReplyDelete
 7. அப்படியா. அண்ணாவைத் தேடித்தான் வந்தீர்களா :) அவருக்கு உங்கள் பின்னூட்டம் பற்றி தெரியப் படுத்துகிறேன். நன்றி.

  ReplyDelete
 8. இனிமையான பாடல். நல்லதொரு விளக்கம். அடிபணிந்தேத்திடும் என இருக்கலாமோ என எண்னுகிறேன்.

  அன்னையருள் அருகிலிருக்கும்!

  ReplyDelete
 9. தலைப்பினில், அஷ்ட லக்ஷ்மி என இருத்தலே சரி. 'க்ஷ்' எனும் அக்ஷரத்துக்கு முன்னால் ஒரு 'க்' தேவையில்லை.

  ReplyDelete

 10. அன்பு சகோதரி கவிநயாவுக்கு மிக்க நன்றி. திருவெழுக்கூற்றிருக்கை பற்றி நான் அறிந்ததெல்லாம் VSK -வின் பதிவைப் படித்துத் தெரிந்து கொண்டதுதான். உங்கள் மூலம் அவர் என் பதிவைப் படித்துக் கருத்து தெரிவித்ததற்கு அவருக்கும் நன்றி. அவர் என் ஆசான் அல்லவா. இதையும் தயை கூர்ந்து அவருக்குத் தெரியப் படுத்துங்கள். மீண்டும் நன்றி.

  ReplyDelete
 11. 'அடிபணிந்தேத்திடும்'/'அடிபணிந்தேற்றிடும்' அதே பொருளில்தான் எழுதினேன் அண்ணா.

  தலைப்பு அவசரத்தில் தட்டச்சியதால் அப்படி ஆகிவிட்டது. திருத்தி விட்டேன். மிக்க நன்றி.

  ReplyDelete
 12. அது புரிந்தது. ஆனால், ஏத்து என்பதற்கு ஒரே பொருள்தான். ஏற்று என்பது பலவிதங்களில் பொருள் கொள்ள முடியுமென்பதால் அதைச் சொன்னேன். வணக்கம்.

  ஏத்து (p. 151) [ ēttu ] , III. v. t. praise, speak highly of, துதி; 2. worship, வணங்கு

  Eற்று (p. 153) [ ēṟṟu ] , III. v. t. raise, lift up, hoist up, put up, எழுப்பு; 2. load, பாரமேற்று; 3. instruct, teach, கற்பி; 4. praise, eulogize, புகழு; 5. light, as a lamp, விளக்கேற்று; 6. think, consider, நினை; 7. run over, as wheel over a person.

  ReplyDelete
 13. வித்தியாசத்தை இப்போதுதான் தெரிந்து கொண்டேன்; திருத்தி விட்டேன், நன்றி அண்ணா.

  ReplyDelete