Monday, May 18, 2015

தோளிலொரு பச்சைக்கிளி


தர்பாரி கானடா ராகத்தில் சுப்பு தாத்தா இனிமையாகப் பாடியதை நீங்களும் கேட்டு ரசியுங்கள்! மிக்க நன்றி தாத்தா!



தோளிலொரு பச்சைக் கிளி தொத்தியிருக்கும், அவள்
துவண்ட இடை வளைந்து நெளிந்து குழைந்திருக்கும்
சொக்கன் முகம் கண்ட விழி சொக்கியிருக்கும், அவள்
பக்கம் வந்தால் வினைகளெல்லாம் விலகி நிற்கும்
(தோளிலொரு)

வைகை நதி ஓடுகின்ற மதுரை நகரிலே, எழில்
மங்கை மீனாள் அவதரித்தாள் கருணையினாலே
திசைகளெல்லாம் வென்று வந்தாள் வீரத்தினாலே, அந்தத்
திகம்பரனை வென்று வந்தாள் இதயத்தினாலே
(தோளிலொரு)

பக்தரெல்லாம் பணிந்திடுவார் பக்தியினாலே, அந்த
பக்தரை அவள் காத்திடுவாள் பார்வையினாலே
பித்துக் கொண்டு பாதங்களைப் பற்றிக் கொண்டாலே, நமைச்
சற்றும் வில காதிருப்பாள் பிரியத்தினாலே
(தோளிலொரு)


--கவிநயா

4 comments:

  1. Replies
    1. மிக்க நன்றி தனபாலன்!

      Delete
  2. "பக்தரெல்லாம் பணிந்திடுவார் பக்தியினாலே, அந்த

    பக்தரை அவள் காத்திடுவாள் பார்வையினாலே

    பித்துக் கொண்டு பாதங்களைப் பற்றிக் கொண்டாலே, நமைச்

    சற்றும் வில காதிருப்பாள் பிரியத்தினாலே!"

    அழகான வரிகள்
    நன்றி அக்கா!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஷைலன்!

      Delete