Monday, March 20, 2017

விட்டு விடு! பற்றி விடு!


கீதாம்மா தன் இனிய குரலில்...தேஷ் ராகத்தில்... மிக்க நன்றி கீதாம்மா!

விட்டு விடு விட்டு விடு, பற்றுகளை விட்டு விடு
பற்றி விடு பற்றி விடு, பாதங்களைப் பற்றி விடு
(விட்டு விடு)

சின்னஞ்சிறு பூம்பாதம் சிந்தையிலே நிறுத்தி விட்டால்
வந்த வினை ஓடி விடும், இன்பம் வந்து கூடி விடும்
(விட்டு விடு)

பதமலரின் வாசமதை மனதினிலே மணக்க விடு
பாவையவள் தடம் பதித்து நினைவுக்குள்ளே நடக்க விடு
அம்மா என்றவளை அன்பு மீற அழைத்து விடு
அவளையன்றி கதியில்லை, உணர்ந்தவளைப் பணிந்து விடு
(விட்டு விடு)

 

--கவிநயா

2 comments:

  1. "பதமலரின் வாசமதை மனதினிலே மணக்க விடு
    பாவையவள் தடம் பதித்து நினைவுக்குள்ளே நடக்க விடு
    அம்மா என்றவளை அன்பு மீற அழைத்து விடு
    அவளையன்றி கதியில்லை, உணர்ந்தவளைப் பணிந்து விடு"

    அழகான வரிகள்
    நன்றி அக்கா !

    ReplyDelete
  2. மிக்க நன்றி ஷைலன்!

    ReplyDelete