உயிருக்குள் உணர்வான தாயே, என்
கவிதைக்குள் கருவாகி வருவாயே நீயே
அம்மா என் றழைத்தேனே தாயே, ஆனாலும்
பதிலேதும் தாராமல் இருப்பதேன் நீயே?
(உயிருக்குள்)
துன்பங்கள் மலை போல வளரும்
உன்னை என் கண்ணினின்றும் காணாமல் மறைக்கும்
கண்ணீரும் தானாக வழியும்
அது எழுகடலின் தண்ணீரைத் தான் விஞ்சி நிற்கும்
(உயிருக்குள்)
துன்பங்கள் எத்தனை வரினும்
உன்னருள் இருந்தால் ஓர் நொடியில் தூசாகும்
கண்ணோடு மணியான தாயே
உன் பின்னோடு நான்வர அருள்வாயே நீயே
(உயிருக்குள்)
--கவிநயா
துன்பங்கள் எத்தனை வரினும்
ReplyDeleteஉன்னருள் இருந்தால் ஓர் நொடியில் தூசாகும் ... கிளிக் S .ஜட்ஜ்மென்ட் .
நிஜம்தான், வருகைக்கு நன்றி!
Delete