Tuesday, July 5, 2022

அன்பைத் தருவாய்

அன்பைத் தருவாய் அம்மா

அன்பைத் தருவாய், உன்றன்

திருப்பாத கமலங்களில்

அன்பைத் தருவாய்

(அன்பை)

 

உன் நினைவில் வாழ்ந்திடவே

அன்பைத் தருவாய்

உலகப் பற்றை அறுத்து உன்மேல்

அன்பைத் தருவாய்

(அன்பை)

 

செவ்வந்தி வானம் போல தேவி உன் நிறம்

செந்தூரம் துலங்கிடவே ஒளிரும் உன் முகம்

செக்கச் சிவந்த பட்டாடை உன்றன் இடையினில்

செங்கமலப் பதம் பதிப்பாய் என்றன் நெஞ்சினில்

(அன்பை)

 

--கவிநயா


 

2 comments:

  1. ஆடியிலே இவள் பிறப்பு
    அன்னையே! உன்
    அன்புப்பரிசோ?
    பாடியுனைப் போற்றுமிவள்
    பாரதியின் கவி
    வாரிசோ?

    பக்தையிவள் பாமலரின்
    கவிநயத்தேன்
    மாந்தியபின்
    தி்த்திக்கும் செந்தேனும்
    பழந்தயிராய்ப்
    புளிப்பது ஏன்?

    இவளின் பாமலர் சூடும்
    சுகம் கண்ட பின்னே நீ
    பிற மலரைக் காண்கையிலே
    மலர் முகம் சுளிப்பது ஏன்?

    பலகோடிப் பாமலர்கள்
    தொடுத்துனக்கு மாலை சூட்டி
    அலங்கரிக்கும் சுகவரம் நீ
    ஆருள்வாயுன் தாசிக்கு.

    அன்பு மகள் கவிநயாவுக்கு
    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. வணக்கம் அம்மா. அன்பான வாழ்த்துகளுக்கும் ஆசிகளுக்கும் மனமார்ந்த நன்றிகள்

    ReplyDelete