என் உணர்வுகள் எல்லாம் கீதாம்மாவின் குரலில் வழிகின்றன. மிக்க நன்றி கீதாம்மா, சுப்பு தாத்தா!
வார்த்தை வரவில்லையே
உன் எழில் பாட, திருப் புகழ்
பாட, இன்று
(வார்த்தை)
சொல்லிச் சொல்லிப் பார்க்கின்றேன்,
சொற்கள் வரவில்லை
எண்ணி எண்ணிப் பார்க்கின்றேன்,
எண்ணத்தில் நீ இல்லை
(வார்த்தை)
முழுமதி வதனத்தை மேகங்கள் மூடியதோ
தமிழ் விளையாடும் வேளை விதி விளையாடியதோ?
அருள் என்னும் கதிராலே……….
அருள் என்னும் கதிராலே மேகத்தை
விலக்கிடுவாய்
உந்தன் திருநாமம் எந்தன் நாவினில்
எழுதிடுவாய்
(வார்த்தை)
--கவிநயா




