Monday, June 27, 2011

வர வேண்டும் வர வேண்டும் தாயே!



வர வேண்டும் வர வேண்டும் தாயே – ஒரு வரம்
தர வேண்டும் தர வேண்டும் நீயே – அம்பா
(வர வேண்டும் )

அறம் வளர்க்கும் அம்பா பர்வத வர்தனி
ஐயாறு தனில் மேவும் தர்மசம் வர்தனி – திரு
வையாறு தனில் மேவும் தர்மசம் வர்தனி
(வர வேண்டும் )

தான் எனும் அகந்தை தலைக்கு ஏறாது
தாழ்ந்த என் நிலையில் தர்மம் மாறாது
வான் புகழ் வள்ளுவன் வகுத்த நன்னெறியினில்
வையகம் வாழ்ந்திட வரம் அருள் தாயே – இவ்
வையகம் வாழ்ந்திட வரம் அருள் தாயே
(வர வேண்டும் )


பத்மா சூரி என்கிறவங்க இந்தப் பாடலை இடும்படி கேட்டிருந்தாங்க. பாடல் ஆசிரியர் யார்னு தெரியலை. பாடல் வரிகளைத் தந்த தம்பி சங்கருக்கு நன்றிகள் பல. பத்மா கேட்டிருந்த பாடகர்களின் குரலில் பாடல் கிடைக்கலை; சங்கரே பாடி அனுப்பறேன்னு சொல்லி இருக்கார். அனுப்பிய பிறகு இங்கே சேர்த்துடறேன்...

இதோ... பாடல் சங்கர் குரலில்... நன்றி சங்கர்!

அன்புடன்
கவிநயா

12 comments:

  1. name of the lyricist?
    very sweet!wd love to hear the song.

    if u happen to find few minutes ,visit my blog fr one more 'ammaa song'sung by 'kala'.

    ReplyDelete
  2. பாடலை அளித்ததிற்கு நன்றிகள் பல. இந்தப்பாடல் "தேரழந்தூர் சகோதரிகளால்" 1970ல் பாடப்பட்டது இவ்ர்கள் பாடிய பிற பாடல்கள் theraundur sisters song ல் net ல் உள்ளது. மீண்டும் நன்றி.---பத்மா

    ReplyDelete
    Replies
    1. அம்மா dharshinikaviya671@gmail.com இந்த மின்னஞ்சல்க்கு அனுப்ப முடியுமா

      Delete
  3. //name of the lyricist?//

    தெரியலை அம்மா...

    //wd love to hear the song.//

    சங்கர் குரலில் பாடலை சேர்த்துட்டேன், பாருங்க...

    //if u happen to find few minutes ,visit my blog fr one more 'ammaa song'sung by 'kala'.//

    சீக்கிரம் வரேன் அம்மா :)

    ReplyDelete
  4. //பாடலை அளித்ததிற்கு நன்றிகள் பல.//

    அழகான பாடல். நீங்கள் கேட்டதால் எங்களுக்கும் கிடைச்சது :) மிக்க நன்றி பத்மா.

    ReplyDelete
  5. //தான் எனும் அகந்தை தலைக்கு ஏறாது
    தாழ்ந்த என் நிலையில் தர்மம் மாறாது
    வான் புகழ் வள்ளுவன் வகுத்த நன்னெறியினில்
    வையகம் வாழ்ந்திட வரம் அருள் தாயே – //

    ஆகா அருமையான பிரார்த்தனை..
    இப்படியே எல்லோரும் பிரார்த்தித்தால்
    நாட்டில் இன்பம் பொங்கும்..

    அருள் ஓங்கும்..

    ReplyDelete
  6. //ஆகா அருமையான பிரார்த்தனை..
    இப்படியே எல்லோரும் பிரார்த்தித்தால்
    நாட்டில் இன்பம் பொங்கும்..//

    நீங்கள் சொல்வது உண்மைதான், ஜானகிராமன்.

    வருகைக்கு நன்றி :)

    ReplyDelete
  7. தான் எனும் அகந்தை தலைக்கு ஏறாது
    தாழ்ந்த என் நிலையில் தர்மம் மாறாது
    வான் புகழ் வள்ளுவன் வகுத்த நன்னெறியினில்
    வையகம் வாழ்ந்திட வரம் அருள் தாயே:)

    Beautiful:)

    ReplyDelete
  8. //Beautiful:)//

    ஆமாம் :)

    வருகைக்கு நன்றி ராஜேஷ்.

    ReplyDelete
  9. i remember that we use to sing this song from my childhood ie around 1990 inthe puththamangalam mariyamman temple in mayiladuthurai distric place near manalmedu 609202 its like family song for us to pray god.

    ReplyDelete
  10. One of my fav song. My mom used to sing. My kid name s parvathavardhini .

    ReplyDelete