Monday, September 24, 2012

நீயின்றி நானில்லை!



சுப்பு தாத்தா பாடித் தந்தைக் கேட்டு மகிழுங்கள்! மிக்க நன்றி தாத்தா! 


நீரின்றி மீனில்லை
நிலமின்றி பயிரில்லை
தாயின்றி சேயில்லை அம்மா
நீயின்றி நானில்லை அம்மா!

விதையின்றி மரமில்லை
கடலின்றி அலையில்லை
வினையின்றி பிறப்பில்லை அம்மா
நீயின்றி நானில்லை அம்மா!

பொறியாக வந்தாய்
தீயாய் வளர்ந்தாய்
புரியாத போதும்
நிலையாக நின்றாய்!

நினையாத போதும்
நீயெந்தன் தாயே
நினைக்கின்ற போதெல்லாம்
நானுந்தன் சேயே!


--கவிநயா

3 comments:

  1. அருமையான வரிகள்... வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete
  2. இன்று காலையிலே தான் திரு ஜெயமோகன் அவர்களின்
    கடவுளைக் கண்டேன் எனச்சொல்பவர்கள் கூற்று பற்றி அவரது
    வாசகர் ஒருவர் வினவியிருந்த ஐயத்திற்கு ஐயந்திரிபற
    விளக்கம் ஒன்று அளித்திருந்தார்கள்.

    அதற்கு நானும் ஒரு பின்னூட்டம் அளித்திருந்தேன்.
    இப்பொழுது இந்தப் பாடலைப் படித்தபோது, பின் அதைப் பாடியபோது,
    இதுவே , இதையே அதற்கு பின்னூட்டமாக தந்திருக்கலாம்
    என உணர்கிறேன்.

    இதை நான் மணிரங் என்னும் ராகத்தின் அடிப்படையிலே பாட‌
    முயற்ச்சிப்பேன்.

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
  3. very sweet..both lyrics and subbusir's paattu!

    ReplyDelete