Monday, December 3, 2012

நெஞ்சில் ஒரு வண்ணம்!



சுப்பு தாத்தா பேஹாக் ராகத்தில் பாடியிருப்பதைக் கேட்டு மகிழுங்கள்! மிக்க நன்றி தாத்தா!

நெஞ்சில் ஒரு வண்ணம் – என்
நினைவில் ஒரு எண்ணம்
(நெஞ்சில்)

பஞ்சில் பற்றிய தீயைப் போல் என்
நெஞ்சைப் பற்றிய துன் எண்ணம்
(நெஞ்சில்)

பகலில் இரவும் தோன்றிடுமோ?
பனியில் கதிரவன் உறைந்திடுமோ?
இயற்கை விதிகள் மாறிடுமோ? – உன்
நினைவில் இருக்கையில் துயர் வருமோ?
(நெஞ்சில்)

(உன்) பதமே கதியெனப் பற்றிய பின்னும்
இதயத்தை வலி பற்றுவ தேன்?
மதியும் மயக்கம் கொள்வதுமேன்? என்
விதியின்னும் என்னை விரட்டுவதேன்?
(நெஞ்சில்)


--கவிநயா

1 comment:

  1. பாட்டைப் படித்து/கேட்டு ரசித்தேன் ;கவிநயா ,சுப்புசார் :நன்றி

    ReplyDelete