Monday, March 18, 2013

பிள்ளை மனம் புரியலையோ?


சுப்பு தாத்தா மோஹனத்தில் உருகியிருப்பதைக் கேட்டு மகிழுங்கள். மிக்க நன்றி தாத்தா!




அன்பாலே அழைக்கும் குரல் கேட்கலையோ
அழகு தேவதைக்கு இரங்கி வர மன மில்லையோ?
உன்பாலே உருகும் உள்ளம் தெரியலையோ
என்றன் அன்னைக் கிந்தப் பிள்ளை மனம் புரியலையோ?

நினையாமல் ஒரு நொடியும் கழிவதில்லை
உன்னை வணங்காமல் ஒரு பொழுதும் விடிவதில்லை
உன்மேல் அன்பைப் பொழிவதற்கே பிறப்பெடுத்தேன்
அந்த அன்பை உனக்குச் சொல்வதற்கே கவி வடித்தேன்

அலை ஓயும் முன்னே நீ வர வேணும்
தலை மேலே தளிர்ப் பாதம் பட வேணும்
சிலை தாங்கும் கரத்தாளே வர வேணும்
விலை யில்லாப் பேரன்பைத் தர வேணும்!

--கவிநயா

10 comments:

  1. "தலை மேலே தளிர்ப் பாதம் பட வேணும்"-எனக்கும்

    ReplyDelete
  2. அருமை... எல்லாருக்கும் விலையில்லாப் பேரன்பைத் தர வேண்டும்...

    ReplyDelete
  3. வாங்க லலிதாம்மா!

    ஆமாம், 'பாதம் என்னும் வாசக் கமலம் தலை மேல் வலிய வைத்து ஆண்டு கொள்ள வேணும்'

    நன்றி அம்மா.

    ReplyDelete
  4. //அருமை... எல்லாருக்கும் விலையில்லாப் பேரன்பைத் தர வேண்டும்...//

    ஆம், எல்லோருக்கும்... :)

    நன்றி தனபாலன்.

    ReplyDelete
  5. இந்த முறை அபிராமி அந்தாதியா?!! ஒருபொழுதும் மறவாமல் தினம் பாடி மனம் உருகி, (பா) மணம் வீசும் கவிமாலை புனைந்தளிக்கும் கவிநயாவுக்கு, அன்பான மணி மாலை, அழகான புகழ் மாலை, நலம் சூழும் அருள் மாலை அன்னை தர வேண்டுகிறேன். மிக்க நன்றி.

    ReplyDelete
  6. //அலை ஓயும் முன்னே நீ வர வேணும்//

    ஆம்.

    subbu thatha.

    www.menakasury.blogspot.com

    ReplyDelete
  7. வாங்க பார்வதி! அம்மாகிட்ட வேண்டிக்கிட்டதுக்கு நன்றி :)

    ReplyDelete
  8. வாங்க சுப்பு தாத்தா. ஒற்றை வார்த்தையில் ரத்தினச் சுருக்கமா சொல்லிட்டீங்களே :)

    வருகைக்கும், தவறாமல் எல்லாப் பாடல்களையும் உடல் நலமில்லாத போது கூட உடனுக்குடன் பாடித் தருவதற்கும் மிக மிக நன்றி தாத்தா!

    ReplyDelete
  9. பாட்டைக் கேட்டு ரசித்தேன் ;கடைசி பதம் மட்டும்நானும் கூடவே பாடிப்பார்த்தேன்(சுலபமா இருந்ததால்!).நன்றி சுப்புசார்

    ReplyDelete
  10. சுப்பு தாத்தா சார்பில் நன்றி அம்மா :)

    ReplyDelete