Monday, March 25, 2013

பாற்கடல் பிறந்தவள்!


பங்குனி உத்திரத்தன்று (இன்று) அம்மாவின் (மகாலக்ஷ்மி) பிறந்த நாளாம்! Happy Birthday to our dearest amma!



சுப்பு தாத்தா மிகவும் அருமையாகப் பாடியிருக்கிறார்... நீங்களும் கேட்டு திருமகளின் அருள் பெறுங்கள்! மிக்க நன்றி தாத்தா!



பாற்கடல் கடைகையில் பதுமத்தில் வந்தாய்
பக்தியைக் கடைகையில் இதயத்தின் நின்றாய்
விடமது பரப்பிய இருளினைக் கொன்றாய்
அருள்விழி மாதவன் மனதினை வென்றாய்!

அழகெல்லாம் திரண்டு உன் னுருவாக...
அருளெல்லாம் திரண்டு உன் விழியாக...
கனிவெல்லாம் திரண்டு உன் மொழியாக...
கருணைக் கடலே உன் மனமாக...

நிதிக்கெல்லாம் அதிபதி ஆனாய் நீயே
பக்தரின் பெருநிதி ஆன என் தாயே
விதியினை விரட்டி உன்னிடம் வந்தேன்
அன்பெல்லாம் திரட்டி உன்னிடம் தந்தேன்!

கடைவிழிப் பார்வை கடையன்மேல் வேண்டும்
விடையில்லா வாழ்விற்கு விடைதர வேண்டும்
மதிமுகம் கண்டெனை மறந்திடல் வேண்டும்
திருமகளே உன் அருள்தர வேண்டும்!


--கவிநயா

11 comments:

  1. வரிகள் அருமை...

    சந்தோஷ மனதிற்கு என்றும் அம்மாவிற்கு பிறந்த நாள் தான்...

    ReplyDelete
  2. கனகதாரை பொழிந்தவளுக்கு கவிநயா பொழியும் கவிதாரை அருமை!

    ReplyDelete
  3. இன்று அம்மாவின் பிறந்தநாள் மட்டுமல்ல, பாற்கடல் தந்த அன்னை, பத்மநாபனுக்கு மண மாலை சூட்டி அவரது திருமார்பில் இடம் பிடித்த நன்னாளும் கூட. அன்னையின் அருள் கூட்டி வந்துள்ள அருமையான பாடலைத் தந்தமைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  4. வணக்கம் !
    அம்மன் பாட்டு என்றதுமே மனம் அன்பால் குழைந்தது
    இனியன கண்டும் இங்கே இன்னும் தொடர வேண்டுகிறேன்
    அவள் இசையை அமுதாய் பொழியும் நல் மனமே !!

    ReplyDelete
  5. //வரிகள் அருமை...

    சந்தோஷ மனதிற்கு என்றும் அம்மாவிற்கு பிறந்த நாள் தான்... //

    ஆமால்ல! சரிதான். நன்றி தனபாலன் :)

    ReplyDelete
  6. //கனகதாரை பொழிந்தவளுக்கு கவிநயா பொழியும் கவிதாரை அருமை!//

    நன்றி லலிதாம்மா.

    ReplyDelete
  7. //பாற்கடல் தந்த அன்னை, பத்மநாபனுக்கு மண மாலை சூட்டி அவரது திருமார்பில் இடம் பிடித்த நன்னாளும் கூட.//

    Happy Birthday & Happy Anniversary ரெண்டுமே அம்மா, உனக்கு!

    சரிதானே பார்வதி? :) நன்றி.

    ReplyDelete
  8. //அம்மன் பாட்டு என்றதுமே மனம் அன்பால் குழைந்தது
    இனியன கண்டும் இங்கே இன்னும் தொடர வேண்டுகிறேன்
    அவள் இசையை அமுதாய் பொழியும் நல் மனமே !!//

    அம்பாளடியாள் அம்மன் பாட்டில் குழைவது இயல்பே. உங்கள் வரவு நல்வரவாகுக!

    ReplyDelete
  9. பங்குனி உத்திரத்தில்
    பாங்காய் அலர்மேல்
    மங்கைக்கு பாமாலை
    மயக்குது மயக்குது

    ReplyDelete
  10. குட்டிக் கவிதை
    இனிக்குது இனிக்குது

    நன்றி திவாகர் ஜி :)

    ReplyDelete