Monday, April 8, 2013

முத்துதிர்ப்பாய் அன்னையே!



சுப்பு தாத்தா சஹானாவில் உருகிப் பாடியிருப்பதைக் கேட்டு மகிழுங்கள்! மிக்க நன்றி தாத்தா!



மௌனம் ஏனோ மங்கையே
கருணை பொழிவாய் கங்கையே
செப்பு இதழைத் திறந்து சின்ன முத்துதிர்ப்பாய் அன்னையே!

வானம் வையம் எங்குமே
கலந்து நிறைந்த கன்னியே
கானங் கேட்டுக் கனிந்து கனிவாய் முத்துதிர்ப்பாய் அன்னையே!

அலையும் கடலும் உறையவே
மலையும் யாவும் மலைக்கவே
மலரை யொத்த இதழில் தேனாய் முத்துதிர்ப்பாய் அன்னையே!

வேதம் உன்றன் பாதமே
அதில் மோகம் கொண்டேன் நானுமே
வேகம் வந்து சோகம் தீர்க்கவோர் முத்துதிர்ப்பாய் அன்னையே!

ஏங்கும் இந்தப் பிள்ளையே
வாங்கி நெஞ்சில் தாங்கியே
பொங்கும் அன்பால் பொன்னைப் போலொரு முத்துதிர்ப்பாய் அன்னையே!

கனவில் நினைவில் எதிலுமே
காட்சி நீயே யாகவே
கண்கள் பெருக புளகம் அரும்ப முத்துதிர்ப்பாய் அன்னையே!


--கவிநயா

5 comments:

  1. // வேதம் உன்றன் பாதமே
    அதில் மோகம் கொண்டேன் நானுமே
    வேகம் வந்து சோகம் தீர்க்கவோர் முத்துதிர்ப்பாய் அன்னையே! //

    அழகான வரிகள் அக்கா !

    ReplyDelete
  2. முத்து முத்தாய் அன்னை திருவாய் மலர்ந்தருள வேண்டும் முத்தான பாடல் அருமை. முத்துமீனாள் அருள் பொழிந்து கட்டாயம் முத்துதிர்ப்பாள். அருமையான பாடல் பகிர்விற்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  3. மிக்க நன்றி ஷைலன்!

    ReplyDelete
  4. மிக்க நன்றி பார்வதி!

    ReplyDelete
  5. முத்துப்பாச்சரம் சூட்டிய கவிநயாவுக்காக அம்மா முத்துதிர்ப்பாள்!
    return gift?:)

    enjoyed the song in subbusir's voice!

    ReplyDelete