Tuesday, January 24, 2017

போற்றி போற்றி!



கீதாம்மாவின் இனிய குரலில், ராகமாலிகையில்

அம்மா போற்றி அகிலம் ஆளும் ஈஸ்வரியே போற்றி
அண்டம் பிண்டம் அனைத்தும் நீயே அருள்வடிவே போற்றி

மதுரை ஆளும் மீனாட்சி உன் மீன் விழிகள் போற்றி

காஞ்சியிலே வளர் காமாட்சி உன் கரு விழிகள் போற்றி

(புதுக்)கோட்டையிலிருந்து புவனம் ஆளும் புவனேஸ்வரி போற்றி

புண்ணிய பூமி காசியிலே வாழ் விசா லாட்சி போற்றி

திரு மியச்சூரில் திருவாய் விளங்கும் லலிதாம்பிகை போற்றி

(திரு)வானைக் காவின் நாயகியே அகிலாண்டேஸ்வரி போற்றி

தில்லைப் பதியில் அன்னை சிவகாமி திருப்ப பதங்கள் போற்றி

திருக் கடவூரில் அபிராமி அவள் அருட் பதங்கள் போற்றி

திரு மயிலையிலே மயில் வடிவாய் வந்த கற்பகத் தாய் போற்றி

மாங்காட்டினிலே ஒற்றை விரலில் தவமிருந்தாய் போற்றி

அங்கும் இங்கும் எங்கும் நீயே திருவடிகள் போற்றி

எந்தன் நெஞ்சில் என்றென்றும் நீ தங்கிடுவாய் போற்றி!


 --கவிநயா

No comments:

Post a Comment