Tuesday, August 7, 2018

தாயே நீயே துணை!



கீதாம்மா வின் இனிய குரலில்... மிக்க நன்றி கீதாம்மா!

தாயே நீயே துணை, எந்தன்
தாயே நீயே துணை
(தாயே)

அருள்விழி அமுதே அஞ்சுகமே
உன்னை நினைத்தால் இனிக்குமென் நெஞ்சகமே
(தாயே)

பவ சாகரமும் சுக சாகரமாகும்
சிவ காமினி உந்தன் அருளால் நலமாகும்
அம்மா அருள்வாயே, அன்பைத் தருவாயே
எந்தை சிவனோடு விடைமேல் வருவாயே
(தாயே)


--கவிநயா

2 comments:

  1. ஆடி செவ்வாயில் நல்லதொரு அம்மன் பாட்டு

    ReplyDelete
  2. வருகைக்கு நன்றி, ராஜி!

    ReplyDelete