Monday, July 30, 2018

ஆடி வருகிறாள்




கீதாம்மா வின் இனிய குரலில்... மிக்க நன்றி கீதாம்மா!

ஆடி வருகிறாள் அன்னை
ஆடி வருகிறாள்
 (ஆடி)

தில்லையிலே நாதனுடன்
ஆடி வருகிறாள்
நாடி வரும் அடியவரைத்
தேடி வருகிறாள்
(ஆடி)

செம்பாதச் சிலம்பொலிக்க
மென்கரத்தில் வளையொலிக்க
முத்து நகைச் சிரிப்பொலிக்க
ஆடி வருகிறாள், அவள்
பக்தர் மனம் கொள்ளை கொள்ளத்
தேடி வருகிறாள்
(ஆடி)

நாயகியாய் நான்முகியாய்
சங்கரியாய் சாம்பவியாய்
மாலினியாய் சூலினியாய்
ஆடி வருகிறாள், நல்ல
பக்தர் தம்மை ஆண்டு கொள்ளத்
தேவி வருகிறாள்
(ஆடி)

--கவிநயா



2 comments:

  1. புவியனைத்தும் ரக்ஷித்தவண்ணம் ,
    கவிநயத்தை ரசித்தவண்ணம் ,
    சிவானியாய் பவானியாய்
    அன்னை வருகிறாள் ; உந்தன்
    பிறந்தநாளில் ஆசி பொழியத்
    தேடி வருகிறாள் !


    ஆடிப்பெருக்காய்ப் பொங்கும் பக்திப்பாடல்களை செவ்வாய்தோறும் பதிவிட்டுப் பரவசப்படுத்தும் கவிநயாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  2. மறவாமல் ஆசி வழங்கிய அன்பு லலிதாம்மாவிற்கு மனமார்ந்த நன்றிகளும், பணிவன்பான வணக்கமும்.

    ReplyDelete