Monday, December 10, 2018

என் மனமே கோவில்



அம்புய விழியாலே அபயம் அளிப்பாள்
பங்கய மலர்க்கரத்தாள் பயம் நீக்கிடுவாள்
செம்புலப் பெயல்நீர்போல் என்னுயிரில் கலந்தாள்
என்மனமே கோவில், அவள் நினைவே தீபம்
(அம்புய)

சிந்தையில் பலப்பல சிந்தனை வந்தாடும்
நடுவினில் அவள்வதனம் மடுமலராய் வாழும்
என்மனமே காடு, அவள்முகம் முழுநிலவாம்
என்மனமே சேறு, அவள்தா மரைமலராம்
(அம்புய)

தில்லையில் சிவனுடன் திருநடனம் புரிவாள்
எல்லையில்லா அன்பால் என்னுளம் குடிபுகுந்தாள்
என்மனமே அரங்கம், அவள் நினைவே நடனம்
என்தமிழின் நாதம், அவள் புகழை ஓதும்
(அம்புய)


--கவிநயா



1 comment:

  1. உள்ளமே கோவில் ஊனுடம்பே ஆலயம்
    வள்ளல் பிரானுக்கு வாய் கோபுரவாசல்
    தெள்ளத்தெளிந்தோர்க்கு சீவன் சிவலிங்கம்
    கள்ளப் புலனைந்தும் காள மணிவிளக்கே! கிளிக் S .ஜட்ஜ்மென்ட் .

    ReplyDelete