Monday, July 1, 2019

மலையரசி


மாதா மலையரசி, மங்கள உமையாம்பிகே
வாராய் எனதருகில், இன்னருள் தாராய்
(மாதா)

சந்ததமும் உந்தன் திருப் பெயர் சொல்வேனே
செந்தமிழ்ப் பண்ணாலே உன்புகழ் நெய்வேனே
(மாதா)

வேதமெல்லாம் போற்றும் வித்தகியே உமையே
சோதனைகள் போதும் அம்மா, சொந்தமெனவே வருவாய்
திருப் பத நிழலெனக்கு இதந் தரும் இடமாகும்
பொற் பதம் பணிந்தவர்க்குப் பிறவியும் சுகமாகும்
(மாதா)



--கவிநயா

1 comment:

  1. மலையரசிக்கு கவிதையால் ஒரு மாலை தொடுத்துள்ளீர்கள் ..அருமை. கிளிக் S .ஜட்ஜ்மென்ட் .

    ReplyDelete