Monday, July 29, 2019

மனதினில் வந்தாய்



மடுவினில் மலர் போலே
 முழுமதி எழில் போலே
  ஒளிகதி ரவன் போலே
   மன தனில் வந்தாயே

சிறுஇதழ் நெளிவாலே
 கடைவிழி அசைவாலே
  திருவடித் துகளாலே
   அருள்பொழி யும்தாயே

மலையரசன் மகளாய்
 சிவனுடனே சிவையாய்
  அரனுடன் அவன் இடத்தில்
    அமர்ந்திருக்கும் தாயே

தேனெனும் உன்நாமம்
 தினமது என்வேதம்
  கதியென உன்பாதம்
   கொள்வதுவே போதும்



--கவிநயா

2 comments:

  1. புவியதன் ஈர்ப்பெனவே ,
    கவியதன் நயமெனவே,
    தாயின் சேயன்பெனவே,
    நீயென்னுள் நிலைப்பாயே !
    அன்புமகள் கவிநயாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. ஆஹா, மறவாமல் வந்து வாழ்த்தியதற்கு மிகவும் நன்றி அம்மா! நலந்தானே?

    ReplyDelete