அடைக்கலமாக வந்தேன் அம்பிகையே
அபயமளித்தென்னை அரவணைப்பாய் நீயே
(அடைக்கலமாக)
அன்பினி உருவம் நீ அருளின் வடிவம் நீ
அன்னையென உன்னை நம்பி வந்தேன் தாயே
(அடைக்கலமாக)
அண்டமெல்லாம் பூத்தவளே, அகிலத்தைக் காப்பவளே
கள்ளமில்லா உள்ளம் தந்து கடையேனையும் காப்பாய்
உள்ளத்தில் உனை இருத்தி உளமார உனைத் துதிக்க
அருள்புரிந் திடுவாயே அம்பிகை புவனேசி
(அடைக்கலமாக)
--கவிநயா
No comments:
Post a Comment