உன் நினைவாய் இருக்க வேண்டுமே, அம்மா
உனதன்பில் திளைக்க வேண்டுமே
(உன்)
உன் நாமம் சொல்லிச் சொல்லி உருக வேண்டுமே
உன் புகழைப் பாடிப் பாடி மகிழ வேண்டுமே
(உன்)
காணுகின்ற பொருள் யாவும் நீயாக வேண்டுமே
பேணுகின்ற பொருள் யாவும் உனதாக வேண்டுமே
நொடிதோறும் நீயென்றன் துணையாக வேண்டுமே
படிதோறும் கரம்பிடித்துக் கரையேற்ற வேண்டுமே
(உன்)
--கவிநயா
No comments:
Post a Comment