Tuesday, October 25, 2022

அன்புக்கு அளவேது?


அம்மா உன் அன்புக்கு அளவேது?

உன் பத நிழலுக்கு இணையேது?

(அம்மா)

 

கமல முகம் கண்டு கனிந்திடும் என்னுள்ளம்

கடலெனும் கருணையிலே கரைந்திடும் என் நெஞ்சம்

(அம்மா)

 

அம்மா என்றழைத்ததும் ஓடி வந்தருள்வாய்

அஞ்சேல் அஞ்சேல் என்று அபயம் தந்திடுவாய்

வழியும் கண்ணீரினை வாஞ்சையில் துடைப்பாய்

கழியட்டும் வினை என்று கனிவுடன் அணைப்பாய்

(அம்மா)


--கவிநயா


2 comments:

  1. அம்மா என்றழைத்ததும் ஓடி வந்தருள்வாய்

    அஞ்சேல் அஞ்சேல் என்று அபயம் தந்திடுவாய்

    வழியும் கண்ணீரினை வாஞ்சையில் துடைப்பாய்

    கழியட்டும் வினை என்று கனிவுடன் அணைப்பாய்

    என்னையும் தான் அம்மா

    நன்றி அக்கா

    ReplyDelete