Wednesday, February 22, 2023

தாயே கதி

 

தாயே கதி

அவள் அருளே நிதி

அவள் பதநிழல் என்றும்

தந்திடும் நிம்மதி

(தாயே)

 

சித்தத்தில் அவள் முகம்

நித்தமும் சுகம் தரும்

பக்கத்தில் அவள் துணை

துக்கங்கள் துரத்திடும்

(தாயே)

 

வந்த வினைகள் ஒழிய

வரும் வினைகள் ஒளிய

சந்ததமும் அவள் பெயரை

சிந்தனை செய்வாய் மனமே

 

இருள் கெடுப்பாள்

அவள் ஒளி கொடுப்பாள்

மருள் கெடுத்தே நமக்கு

அருள் கொடுப்பாள்

(தாயே)


--கவிநயா


2 comments:

  1. ஆதிபராசக்தி அன்னை ஆன்மிகத் தமிழர்க்கு ஆடிப்பரிசாக அருளிய
    கவிநயாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  2. "இருள் கெடுப்பாள்

    அவள் ஒளி கொடுப்பாள்

    மருள் கெடுத்தே நமக்கு

    அருள் கொடுப்பாள்"

    அருமை .

    ReplyDelete