தாயே நீயே துணை, எந்தன்
தாயே நீயே துணை
(தாயே)
அருள்விழி அமுதே அஞ்சுகமே
உன்னை நினைத்தால் இனிக்குமென் நெஞ்சகமே
(தாயே)
பவ சாகரமும் சுக சாகரமாகும்
சிவ காமினி உந்தன் அருளால் நலமாகும்
அம்மா அருள்வாயே, அன்பைத் தருவாயே
எந்தை சிவனோடு விடைமேல் வருவாயே
(தாயே)
--கவிநயா




