கீதாம்மா வின் இனிய குரலில்... மிக்க நன்றி கீதாம்மா!
நாளும் உன்னை நினைக்கின்றேன்
நாயகியே மனம் களிக்கின்றேன்
கண்மணி உன்முகம்
பார்க்கின்றேன்
கருவிழி களில்நீர்
கோக்கின்றேன்
(நாளும்)
திருவடி எழில்மிகு
தாமரையே
திருமுகம் பூரண
சந்திரனே
திருநாமம் வேய்ங்
குழல்கீதம்
திருநோக்கில் உயிர்கள்
வாழும்
(நாளும்)
ஒருமுறை உனை நினைந்தால்
போதும்
ஒருமுறை பெயர்
சொன்னால் போதும்
ஒரு நொடியினில்
வினை அழித்திடுவாய்
ஒரு மனதாய் அருள்
அளித்திடுவாய்
(நாளும்)
--கவிநயா
No comments:
Post a Comment