Monday, October 9, 2017

கல்லும் கவி பாடும்!



கீதாம்மா வின் இனிய குரலில்... மிக்க நன்றி கீதாம்மா!

வெள்ளை உள்ளத் தாமரையில் வீற்றிருப்பாள்

எண்ணமென்னும் வீணையினை மீட்டியிருப்பாள்

(வெள்ளை)



கொள்ளை எழில் வடிவினளாம் கலைவாணி

பிரம்மனுள்ளம் கொள்ளை கொண்ட எழில் வேணி

(வெள்ளை)



கிண்ணத்திலே மது அவள் தரும் ஞானம்

கண்ணின் மணி அவள் வடிவே நான்கு வேதம்

அன்னமென நடை பயிலும் அவள் நாமம்

சொன்னால் கல்லும் கூடத் தமிழ்க் கவி பாடும்

(வெள்ளை)


--கவிநயா



No comments:

Post a Comment