கீதாம்மா வின் இனிய குரலில்... மிக்க நன்றி கீதாம்மா!
அழகானவள் அருள் வடிவானவள்
அன்போடு எழில் கூடி உருவானவள்
(அழகானவள்)
முத்தாணி மண்டபத்தில் முத்துப் போல் ஒளிர்ந்திருப்பாள்
சிற்றாடைப் பெண்ணைப் போலே சிரித்து மகிழ்ந்திருப்பாள்
தொட்டோடும் தென்றல் காற்றாய் நெஞ்சகத்தில்
குளிர்ந்திருப்பாள்
பற்றில்லாச் சிவனைக் கூடப் பித்துக் கொள்ளச் செய்திடுவாள்
(அழகானவள்)
ஸ்ரீசக்ர ராணியவள், சிம்ம வாகினி யவள்
வக்ர காளியும் அவள், துர்கா தேவியு மவள்
செல்வங்களை அள்ளித் தரும் ஸ்ரீலக்ஷ்மி தாயுமவள்
ஞானந் தன்னை நல்கும் போது மாசரஸ்வதி யவள்
(அழகானவள்)
--கவிநயா
No comments:
Post a Comment