உன்னாலே உன்னாலே எல்லாம் உன்னாலே
எந்நாளும் எந்நாளும் என் நினைவுகள் உன்மேலே
(உன்னாலே)
உந்தன் நினைவால் உள்ளம் உருகி கண்ணீர் பெருகுதம்மா
உன்னை நினையா ஒரு கணங்கூட வீணாய்ப் போகுதம்மா
(உன்னாலே)
சிறுதுளித் துளியாய் எந்தன் அன்பு உனக்காய்ப் பெருகுதம்மா
பெருமழை போலே உந்தன் அன்பு என்னை நனைக்குதம்மா
பண்ணால் உன்னைப் பாடப்பாட தமிழும் மகிழுதம்மா
கண்ணால் எம்மைக் காக்கும் உந்தன் தாள் பணிந்தோமம்மா
(உன்னாலே)
--கவிநயா
No comments:
Post a Comment