Monday, October 1, 2018

என்று வருவாய்?



ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கீதம்
உனக்காய்ப் பாடுகிறேன்
கீதம் கேட்டு தாய் நீ வரும் நாள்
என்றோ ஏங்குகிறேன்

சூலம் ஏந்தும் போதில் காளி
வீணை ஏந்தும் போதில் வாணி
மாமலர் மீதில் எழில் ஸ்ரீதேவி
எல்லாம் நீயே அருள்வாய் தாயே

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கீதம்
உனக்காய்ப் பாடுகிறேன்
கீதம் கேட்டு தாய் நீ வரும் நாள்
என்றோ ஏங்குகிறேன்

நான்முகி நீயே நாரணி நீயே
மாலினி நீயே சூலினி நீயே
வான்முகில் பொழியும் தேன்மழை நீயே
வளம் தரும் தாயே வாழ வைப்பாயே


--கவிநயா

No comments:

Post a Comment